துணைப்பொதுச்செயலாளரை நியமிக்கும் அதிகாரம் இனி ஸ்டாலின் கையில்…திமுகவில் சட்டத்திருத்தம்!

துணைப்பொதுச்செயலாளரை நியமிக்கும் அதிகாரம் இனி ஸ்டாலின் கையில்…திமுகவில் சட்டத்திருத்தம்!

திமுகவில் துணைப்பொதுச்செயலாளரை நியமிக்கும் அதிகாரம் கட்சியின் தலைவரான ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது.

துணைப்பொதுச்செயலாளரை நியமிக்கும் அதிகாரம் இனி ஸ்டாலின் கையில்…திமுகவில் சட்டத்திருத்தம்!

திமுகவின் பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களாக ஆ.ராசா, பொன்முடி நியமிப்பதாக ஸ்டாலின் அறிவித்தார். திமுக சட்டதிட்ட விதி பிரிவு 7(3) கீழ் ஆ.ராசா, பொன்முடி நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. துணைப் பொதுச்செயலாளராக ஐ. பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஏற்கனவே துணைப் பொதுச் செயலாளராக உள்ளனர்.

துணைப்பொதுச்செயலாளரை நியமிக்கும் அதிகாரம் இனி ஸ்டாலின் கையில்…திமுகவில் சட்டத்திருத்தம்!

இந்நிலையில் திமுகவில் துணைப்பொதுச்செயலாளரை நியமிக்கும் அதிகாரம் முக ஸ்டாலினிடம் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை திமுக துணைப்பொதுச்செயலாளர்களை கட்சியின் பொதுச்செயலாளர் நியமித்து வந்த நிலையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. சட்டத்திருத்தத்தால் பொன்முடி, ஆ.ராசாவை துணைப்பொதுச்செயலாளர்களாக பொதுக்குழுவில் ஸ்டாலின் அறிவித்தது கவனிக்கத்தக்கது.