• November
    17
    Sunday

Main Area

Main



அசுரன் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்: மு.க.ஸ்டாலின் பாராட்டு!

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

இயக்குநர்  வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் வெளியாகியுள்ள அசுரன் குறித்து ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.  

asuran

வெற்றிமாறன் - தனுஷ் இருவரின் வெற்றி கூட்டணியில் உருவாகிய அசுரன் திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. கலைப்புலி.எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள  இப்படம் பூமணி எழுத்தில் வெளியான வெக்கை நாவலை மையமாக வைத்து  எடுக்கப்பட்டுள்ளது. இதில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் , பிரகாஷ் ராஜ் , பசுபதி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படம்  பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. 

 

இந்நிலையில்  அசுரன் படம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில், 'அசுரன்  - படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்!
கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் 
தனுஷுக்கும் பாராட்டுகள்'  என்று புகழ்ந்துள்ளார். 
 

2018 TopTamilNews. All rights reserved.