தீ விபத்தில் இறந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஸ்டாலின் இரங்கல்!

 

தீ விபத்தில் இறந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஸ்டாலின் இரங்கல்!

மதுரை தீ விபத்தில் உயிரிழந்த 2 தீயணைப்பு வீரர்களின் குடும்பங்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தீ விபத்தில் இறந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஸ்டாலின் இரங்கல்!

மதுரை தெற்குமாசி வீதியில் இயங்கி வந்த பிரபல ஜவுளி கடையில் நேற்று இரவு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக பலகோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. கட்டுக்குள் அடங்காத இந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதைத் தொடர்ந்து தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயன்றபோது பழைய கட்டிடமான அது இடிந்து விழுந்தது. இதில் சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி என்ற தீயணைப்பு வீரர்கள் இருவர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்களுக்கு உடனடியாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தீ விபத்தில் இறந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஸ்டாலின் இரங்கல்!

தீவிபத்தில் இறந்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அத்துடன் அவர்களின் வீட்டில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் விபத்தில் காயமடைந்த மேலும் 2 தீயணைப்பு வீரர்களுக்கு தலா ரூ . 3 லட்சம் நிதி உதவியும் அவர்கள் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “மதுரை, ஜவுளிக்கடை தீ விபத்தில் போராடி உயிரிழந்த தீயணைப்பு வீரர்கள் சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்; அனுதாபங்கள். வீரர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இரு குடும்பத்தினருக்கும் தமிழக அரசு தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.