5 முக்கிய திட்டங்களை இன்று தொடங்கி வைக்கும் ஸ்டாலின் ….என்னென்ன தெரியுமா?

 

5 முக்கிய திட்டங்களை இன்று தொடங்கி வைக்கும் ஸ்டாலின் ….என்னென்ன தெரியுமா?

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி இன்று 5 திட்டங்களை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க .ஸ்டாலின்.

5 முக்கிய திட்டங்களை இன்று தொடங்கி வைக்கும் ஸ்டாலின் ….என்னென்ன தெரியுமா?

‘முத்தமிழ் அறிஞர்’ என்று போற்றப்படும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் நல்வாழ்விற்கு கொரோனா பாதிப்பு நிவாரண நிதி உதவி இரண்டாவது தவணை ரூபாய் 2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

5 முக்கிய திட்டங்களை இன்று தொடங்கி வைக்கும் ஸ்டாலின் ….என்னென்ன தெரியுமா?

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஐந்து திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அதில் கொரோனா பாதிப்பு நிவாரண உதவியாக 14 மளிகை பொருட்கள் அடங்கிய பைகள் வழங்குதல், கொரோனா நோய்க்கு நிவாரணமாக அறிவிக்கப்பட்ட இரண்டாவது தவணை ரூபாய் 2000 வழங்குதல், தமிழ்நாடு அரசு அறநிலையத்துறையின் கீழ் ஒரு கால பூஜையுடன் இயங்கும் 12 ஆயிரத்து 959 கோயில்களில் மாத சம்பளம் இன்றி பணிபுரியும் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவியாக ரூபாய் 4 ஆயிரம், 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகை பொருட்கள் வழங்குதல் , நோய் தொற்றால் இறந்த பத்திரிக்கையாளர் குடும்பத்தினருக்கு ரூபாய் 10 லட்சம், மருத்துவர், மருத்துவ பணியாளர் காவலர் மற்றும் நீதிபதிகள் ஆகியோரின் குடும்பத்தினருக்கு ரூபாய் 25 லட்சம் வழங்குதல் ஆகிய உதவி திட்டங்களை வழங்கி நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். அத்துடன் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்ட பயனாளிகள் 10 நபர்களுக்கு அரசு பயன்களையும் வழங்கவுள்ளார்.