ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இல்லை.. முதல்வராக வருவார்! – மாஃபா பாண்டியராஜனுக்கு தி.மு.க பதிலடி

 

ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இல்லை.. முதல்வராக வருவார்! – மாஃபா பாண்டியராஜனுக்கு தி.மு.க பதிலடி

மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இல்லை, முதல்வராக வருவார் என்று தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு தி.மு.க-வின் டி.கே.எஸ் இளங்கோவன் பதில் அளித்துள்ளார்.
தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் திருவள்ளூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். நடிகர்

ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இல்லை.. முதல்வராக வருவார்! – மாஃபா பாண்டியராஜனுக்கு தி.மு.க பதிலடி

ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் யார் எதிர்க்கட்சித் தலைவர் என்பதில் ரஜினிக்கும் ஸ்டாலினுக்கும் போட்டி இருக்கும். எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்கு கூட ஸ்டாலின் போராட வேண்டியிருக்கும்” என்றார்.
இது குறித்து தி.மு.க எம்.பி டி.கே.எஸ்.இளங்கோவனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக

ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இல்லை.. முதல்வராக வருவார்! – மாஃபா பாண்டியராஜனுக்கு தி.மு.க பதிலடி

வரப்போவது இல்லை. அவர் முதல்வராக வருவார். ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைப் பார்த்து மக்கள் ஏமாந்து அ.தி.மு.க-வுக்கு வாக்களித்துவிடுவார்கள் என்று அமைச்சர்கள் நினைக்கின்றனர். வேலையின்மை, பொருளாதார சீரழிவு, நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த முடியாத செயல் போன்றவற்றை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு மாற்றாக தி.மு.க ஆட்சிக்கு வரும்” என்றார்.