இன்று கிராம சபை கூட்டத்தை நடத்துகிறார் திமுக தலைவர் ஸ்டாலின்

 

இன்று கிராம சபை கூட்டத்தை நடத்துகிறார் திமுக தலைவர் ஸ்டாலின்

காஞ்சிபுரம் குன்னம் கிராமத்தில் இன்று கிராம சபை கூட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நடத்துகிறார். கிராமசபை கூட்டத்தில் மக்களின் குறைகள், தேவைகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்க உள்ளார்.

இன்று கிராம சபை கூட்டத்தை நடத்துகிறார் திமுக தலைவர் ஸ்டாலின்

அத்துடன் திமுக முன்னணி நிர்வாகிகள் 1,600 பேர், 16 ஆயிரத்துக்கும் அதிகமான கிராமங்கள், வார்டுகளில் இன்று முதல் ஜனவரி 10-ம் தேதி வரை கிராம சபை கூட்டங்களை நடத்தி, ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று கிராம சபை கூட்டத்தை நடத்துகிறார் திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றியம் மேல்பட்டி கிராமம், பொருளாளர் டி.ஆர்.பாலு திருவள்ளூர் மாவட்டம் நடுக்குத்தகை, கே.என்.நேரு திருச்சி மாவட்டம் பெருவிளநல்லூர், விழுப்புரம் திருவெண்ணைநல்லூரில் துணை பொதுச்செயலாளர் க.பொன்முடி, சென்னை ராயபுரத்தில் ஆ.ராசா, திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றியம் வட சின்னார்பாளையம் கிராமத்தில் அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் கிராம சபை கூட்டம் நடத்தி மக்களின் குறைகளை கேட்டறியவுள்ளனர்.