’90 அடி’ உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியேற்றினார் ஸ்டாலின்!

 

’90 அடி’ உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியேற்றினார் ஸ்டாலின்!

திருச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 90 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியேற்றினார்.

’90 அடி’ உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியேற்றினார் ஸ்டாலின்!

திருச்சியில் ‘விடியலுக்கான முழக்கம்’ என்ற தலைப்பில் இன்று திமுக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. திருச்சி அருகே சிறுகனூரில் நடைபெறவுள்ள நிலையில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சி சென்றுள்ளார். கூட்டத்தில் மாலை 6.30மணிக்கு உரையாற்றவுள்ள ஸ்டாலின், திமுகவின் அடுத்த 10 ஆண்டிற்கான திட்டங்கள் குறித்தும், பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் வெளியாகவுள்ளது.

’90 அடி’ உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியேற்றினார் ஸ்டாலின்!

இந்நிலையில் திருச்சியில் விடியலுக்கான முழக்கம் என்ற சிறப்பு பொதுக்கூட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியாக 90 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அவருடன் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக காலையில் பேராசிரியர் அன்பழகன் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது வீட்டிற்கு சென்று திருவுருவ படத்திற்கு மரியாதை செய்த அவர், பின்னர் காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீட்டில் கையெழுத்திட்டார். பின்னர் தனிவிமானம் ஸ்டாலின் திருச்சி சென்றார். திருச்சி சென்ற ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.