முதல்வரான பிறகு முதல் முறையாக திருவாரூர் செல்லும் ஸ்டாலின்

 

முதல்வரான பிறகு முதல் முறையாக திருவாரூர் செல்லும் ஸ்டாலின்

கொரோனா தடுப்பு ஆய்வு பணிக்காக முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்திற்கு செல்கிறார்.

முதல்வரான பிறகு முதல் முறையாக திருவாரூர் செல்லும் ஸ்டாலின்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்த மே 7-ஆம் தேதி முதல்வராக பதவியேற்றார் . ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று நேற்றுடன் ஒரு மாதம் ஆன நிலையில் பல்வேறு திட்டங்களுக்கு வழி வகுத்து வருகிறார்.கொரோனா நிவாரண தொகை ரூ.4000, 14 இலவச மளிகை பொருட்கள், செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் ,தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விபத்தில் இழந்த குடும்பங்களுக்கு அரசு வேலை மற்றும் உதவித்தொகை, முன்கள பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து என பல்வேறு அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட்டு அதிரடி காட்டி வருகிறார்.

முதல்வரான பிறகு முதல் முறையாக திருவாரூர் செல்லும் ஸ்டாலின்

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வரும் 12ஆம் தேதி திருவாரூர் சென்று கொரோனா தடுப்பு பணியை ஆய்வு செய்கிறார். முதல்வரான பிறகு மு.க.ஸ்டாலின் முதல் முறையாக திருவாரூர் மாவட்டத்திற்கு செல்ல உள்ளார். வரும் 12ஆம் தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைத்த பிறகு முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் செல்கிறார்.