சபரீசன் மூலம் ஸ்டாலின் கொடுத்த இன்ஸ்ட்ரக்ஷன்! அனல் கக்கிய பிரசாந்த் கிஷோர்!

 

சபரீசன் மூலம் ஸ்டாலின் கொடுத்த இன்ஸ்ட்ரக்ஷன்! அனல் கக்கிய பிரசாந்த் கிஷோர்!

பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்திற்கு எதிராக திமுகவில் அனல் வீசத் தொடங்கியிருக்கிறது. ‘’பாரம்பரியம் மிக்க எங்களுக்கு நேற்றைக்கு முளைத்த காளான்கள், அதுவும் கட்சிக்குக் கொஞ்சமும் சம்மந்தமில்லாதவர்கள் உத்தரவிடுவதா!’’ என்கிற கொதிப்பு சீனியர்கள் மத்தியில் அலையடிக்கிறது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் உத்தி வகுப்பாளராக ஐ-பேக் நிறுவனம் நியமிக்கப்பட்டிருக்கிறது. பல கோடி ரூபாய் செலவிலான இந்த நியமனத்தின் பின்னணியில் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் இருக்கிறார்.

சபரீசன் மூலம் ஸ்டாலின் கொடுத்த இன்ஸ்ட்ரக்ஷன்! அனல் கக்கிய பிரசாந்த் கிஷோர்!


கொரோனாவைக் காரணம் காட்டி ’வேலை வேகமெடுக்கவில்லை’ என திமுக தலைமையிடம் சமாளித்து வந்தது ஐ-பேக். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ஸ்டாலின், ’’உங்களை ஒப்பந்தம் செய்து மாதக் கணக்கில் ஆகிவிட்டது. இன்னும் உருப்படியாக எதையும் செய்யவில்லையே!’’ என அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எதையும் செய்யாவிட்டாலும் ’டேட்டா கலெக்ஷன்’ என்கிற பெயரில் ஐ-பேக் டீம் செய்யும் அதகளங்களால் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் நொந்து நூலாகி வருகிறார்களாம்.
நேரம் காலம் இன்றி தொலைபேசியில் அழைக்கும் ஐ-பேக் ஆட்கள், ஒன்றுக்கும் உதவாத விபரங்களையெல்லாம் கேட்டு நோகடிக்கிறார்களாம். அதிலும் பெரும்பாலான ஐ-பேக் ஆட்கள் வயது தராதரமின்றி பேசுவது, மூத்த நிர்வாகிகள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சபரீசன் மூலம் ஸ்டாலின் கொடுத்த இன்ஸ்ட்ரக்ஷன்! அனல் கக்கிய பிரசாந்த் கிஷோர்!


‘’வருஷக்கணக்காக கட்சிக்காக உழைத்தும் இப்படி சின்னப் பசங்ககிட்ட மன்றாட வேண்டியிருக்கிறதே!’’ என நொந்துபோன நிர்வாகிகள் பலர் தங்களுக்குள் இது பற்றி பேசியிருக்கின்றனர். இதில் கொஞ்சம் காரமான தென்மாவட்ட நிர்வாகி ஒருவர், இது பற்றி ஸ்டாலினிடம் புகார் வாசித்திருக்கிறார்.


‘’நான் சொல்வதை நீங்கள் அப்படியே நம்ப வேண்டாம். இவர்களிடமும் விசாரித்துப் பாருங்கள்’’ என சிலரது பெயர்களைக் கூறியிருக்கிறார். ஸ்டாலின் அவர்களிடம் தொடர்புகொள்ள, கொஞ்சம் தயக்கத்துடன் நடந்தவற்றை தெரிவித்திருக்கின்றனர் அந்தத் தரப்பினர்.
இதனைத் தொடர்ந்து சபரீசன் மூலமாக பிரசாந்த் கிஷோருக்கு சில உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறார் ஸ்டாலின். கட்சி நிர்வாகிகளை எந்த நிலையிலும் கடுப்பேற்றக் கூடாது என்கிற ஸ்டாலினின் இன்ஸ்ட்ரக்ஷனைக் கேட்ட கிஷோர் செம கடுப்பாகிவிட்டாராம்.

சபரீசன் மூலம் ஸ்டாலின் கொடுத்த இன்ஸ்ட்ரக்ஷன்! அனல் கக்கிய பிரசாந்த் கிஷோர்!


‘’பல வருடங்கள் ஒரே பதவியில் சொகுசா இருப்பதால் உங்க ஆட்களுக்கு ஒழுங்கா வேலை பார்க்க முடியல. ஒரு சின்ன டீடெயில் கேட்டால் கூட நாள் கணக்கில் இழுத்தடிக்கிறாங்க. துடிப்பான எங்க பாய்ஸ் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாததால் பழியை எங்கள் மீது தூக்கி போடறாங்க. அவங்களை சரிப்படுத்த சொல்லுங்க. இல்லாவிட்டால் பின்னாடி எங்களை குறை சொல்லக் கூடாது’’ என சபரீசனிடம் அனல் கக்கியிருக்கிறார் கிஷோர்.
ஐ-பேக் தரப்பின் அனலை சபரீசன் அப்படியே பாஸ் பண்ண, ’வம்பை விலைகொடுத்து வாங்கிவிட்டோமோ!’ என தவியாய்த் தவித்து வருகிறாராம் ஸ்டாலின்.