“ஸ்டாலின் அனைவரையும் அரவணைத்து செல்கிறார்” : செல்லூர் ராஜூ பாராட்டு!

 

“ஸ்டாலின் அனைவரையும் அரவணைத்து செல்கிறார்” : செல்லூர் ராஜூ பாராட்டு!

முதல்வர் ஸ்டாலின் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டுமென நினைக்கிறார் என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

“ஸ்டாலின் அனைவரையும் அரவணைத்து செல்கிறார்” : செல்லூர் ராஜூ பாராட்டு!

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி பதவி ஏற்றார். அன்று முதல் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி வருகிறார். அத்துடன் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாகவும், ஊரடங்கை கண்காணிக்கும் விதமாகவும் அமைச்சர்களும் மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.அதே சமயம் தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என தமிழக அரசு முதலில் அறிவித்த நிலையில், தொற்று பரவலை கருத்தில்கொண்டு நேரக் குறைப்பை நடைமுறைக்கு கொண்டு வந்தது. அத்துடன் கொரோனா தடுப்பு சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவர் உள்ளிட்ட மருந்துகளை மத்திய அரசிடமிருந்து முறையாகப் பெற்று வருகிறது. இந்த பேரிடர் காலத்திலும் தொடர்ந்து பணியாற்றி வரும் திமுக அரசை பலரும் பாராட்டியும், விமர்சித்தும் வருகிறார்கள்.

“ஸ்டாலின் அனைவரையும் அரவணைத்து செல்கிறார்” : செல்லூர் ராஜூ பாராட்டு!

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ” முதல்வர் ஸ்டாலின் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டுமென நினைக்கிறார். மக்களின் தேவையை பூர்த்தி செய்தால் திமுக அரசை வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எடுத்தவுடன் ஆளும் அரசை குறை சொல்லக்கூடாது என்பதால் குறை சொல்வதில்லை” என்று கூறினார்.