“தமிழர் உணர்வுடன் விளையாடாதீர்கள்” இந்தி தெரியாததால் ‘வங்கி கடன்’ மறுப்புக்கு ஸ்டாலின் கண்டனம்!

“தமிழர் உணர்வுடன் விளையாடாதீர்கள்” இந்தி தெரியாததால் ‘வங்கி கடன்’ மறுப்புக்கு ஸ்டாலின் கண்டனம்!

இந்தி தெரியாததால் வங்கி கடன் தரமுடியாது என வங்கி மேலாளர் மறுப்பு தெரிவித்த சம்பவத்திற்கு முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழர் உணர்வுடன் விளையாடாதீர்கள் . சிறு பொறிகள் தீப்பிழம்பாக மாறிவிடும் பேராயம் உண்டு, ஜெயங்கொண்டத்தில் கடன் கோரிய ஒய்வு பெற்ற மருத்துவருக்குக் கடன் தர வாங்கி அதிகாரி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்தி தெரியாத உங்களுக்குக் கடன் தர முடியது என் ஆணவத்துடன் பதில் கூறியுள்ளார் வங்கி அதிகாரி. இந்தி மொழிவெறி எண்ணெய் ஊற்றி வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது’ என்று ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

“தமிழர் உணர்வுடன் விளையாடாதீர்கள்” இந்தி தெரியாததால் ‘வங்கி கடன்’ மறுப்புக்கு ஸ்டாலின் கண்டனம்!

இதனிடையே அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் இயங்கி வரும் தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கியில் கடந்த 18 ஆண்டுகளாக அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு தலைமை மருத்துவர் பாலசுப்பிரமணியம் என்பவர் வாடிக்கையாளராக உள்ளார்.

“தமிழர் உணர்வுடன் விளையாடாதீர்கள்” இந்தி தெரியாததால் ‘வங்கி கடன்’ மறுப்புக்கு ஸ்டாலின் கண்டனம்!

இவர் இவர் தனக்கு சொந்தமான இடத்தில் ஈடுகட்ட வங்கிக் கடன் உதவி பெற வாங்கி மேலாளரைச் சந்திக்க சென்ற போது,உங்களுக்கு இந்தி தெரியுமா? நான் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவன், மொழி பிரச்சினை உள்ளதால் உங்களுக்கு கடன் தர முடியாது என்று கூறி திருப்பி அனுப்பியுள்ளார். ஆங்கிலத்தில் பேசுமாறு ஓய்வுபெற்ற அரசு தலைமை மருத்துவர் பாலசுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்த போதும் அவர் செவிசாய்க்கவில்லை என்பது கூடுதல் தகவல் .