kaappan-mobile kaappan-large
  • September
    19
    Thursday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


சுவர் ஏறி குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்தது நாட்டிற்கே அவமானம் : மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

 முக.ஸ்டாலின்
முக.ஸ்டாலின்
Loading...

சென்னை: சிபிஐ அதிகாரிகள் வீட்டின் சுவர் ஏறிக் குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்தது நாட்டிற்கே அவமானம் என்று முக ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

chithambaram

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து  ப.சிதம்பரம் நேற்று இரவு  கைது செய்யப்பட்டார். அவரது வீட்டின் கதவுகள் திறக்கப்படாததால் சிபிஐ அதிகாரிகள், இல்லத்திற்குள் சுவர் ஏறி குதித்து அவரை அதிரடியாகக் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்குப் பலவேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் எந்த வித கருத்தையும் முன்வைக்காமலிருந்தார். 

stalin

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முக.ஸ்டாலின், 'சிபிஐ அதிகாரிகள் வீட்டின் சுவர் ஏறி குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்தது நாட்டிற்கே அவமானம். இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த வழக்கில் தவறாமல் ஆஜராகி வந்த சிதம்பரத்தை கைது செய்துள்ளது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும்' என்றார். 

chithambaram

திமுக தலைவர் ஸ்டாலின் அரசியல் நாகரீகமற்ற முறையில் பேசி வருவதாக  அமைச்சர் ஜெயக்குமார் கூறியதற்குப் பதிலளித்த ஸ்டாலின், ஜெயக்குமார் ஒரு ஜோக்கர். அவரது விமர்சனத்திற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது ' என்று கிண்டலாகப்  பதிலளித்தார். 
 

2018 TopTamilNews. All rights reserved.