எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு… சகாபுதீன் உள்பட இருவருக்கு, 5 நாள் போலீஸ் காவல்…

 

எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு… சகாபுதீன் உள்பட இருவருக்கு, 5 நாள் போலீஸ் காவல்…

சென்னை

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதான சகாபுதீன் உள்ளிட்ட இருவரை 5 காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ-வுக்கு, சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

கடந்த ஆண்டு குமரி மாவட்டம் களியாக்காவிளையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.எஸ்.ஐ வில்சன் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு வரும் என்ஐஏ அதிகாரிகள், ஏற்கனவே 6 பேரை கைதுசெய்த நிலையில் 7-வதாக சகாபுதீன் என்பவரை கைதுசெய்தனர். மேலும், கொலையாளிகளுக்கு சிம் கார்டுகள் மற்றும் போலி ஆணவங்கள் தயாரித்து கொடுத்ததாக பெங்களூரில் சையத் அலி என்பரையும் கைதுசெய்திருந்தனர்.

எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு… சகாபுதீன் உள்பட இருவருக்கு, 5 நாள் போலீஸ் காவல்…

இவர்கள் இருவரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, பூந்தமல்லியில் சிறப்பு நீதிமன்றத்தில், என்ஐஏ அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி செந்தூர்பாண்டியன், இருவரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். மேலும், அவர்களை வரும் 23ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் அவர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்த என்ஐஏ அதிகாரிகள் அழைத்துச்சென்றனர்.