வங்கிகளை இணைத்ததால் வங்கி பணியாளர்கள் நீக்கப்படமாட்டார்கள்….. பஞ்சாப் நேஷனல் வங்கி

வங்கிகளை இணைத்ததால் வங்கி பணியாளர்கள் நீக்கப்படமாட்டார்கள்….. பஞ்சாப் நேஷனல் வங்கி

2019 ஆகஸ்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத்துறை வங்கிகளான பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா ஆகிய 3 வங்கிகளும் இணைக்கப்படும் என அறிவித்தார். அதாவது ஓரியண்டல் பேங்க ஆப் காமர்சும் யுனைடெட் பேங்க் ஆப் இந்தியாவும் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்படும். அந்த 3 பொதுத்துறை வங்கிகளின் ஒருங்கிணைப்பு கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

வங்கிகளை இணைத்ததால் வங்கி பணியாளர்கள் நீக்கப்படமாட்டார்கள்….. பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி

வங்கிகள் இணைப்பால் பணியாளர்கள் நீக்கப்படலாம் என அச்சம் எழுந்தது. ஆனால் பணியாளர்கள் நீக்கப்படமாட்டார்கள் என செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமை செயல் அதிகாரி எஸ்.எஸ். மல்லிகார்ஜூனா ராவ் தெரிவித்தார். அப்போது அவர் மேலும் கூறுகையில், ஓரியண்டல் பேங்க் ஆப் காமா்ஸ், யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா வங்கிகளை பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைத்ததால் பணியாளர்களை நீக்க முடியாது.

வங்கிகளை இணைத்ததால் வங்கி பணியாளர்கள் நீக்கப்படமாட்டார்கள்….. பஞ்சாப் நேஷனல் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி 1.03 லட்சம் பணியாளர்களின பலத்தை கொண்டுள்ளது. மேலும் வணிக வளர்ச்சியுடன், எங்கள் ஊழியர்களின் பலமும் வளரும். தற்போது பொருளாதாரத்தில் முன்னேற்றம் உருவாகி வருவதால், ரிசர்வ் வங்கி அறிவித்தப்படி, கடன்களை திரும்ப செலுவதற்கான காலஅவகாசத்தை ஆகஸ்ட் 31ம் தேதிக்கு பிறகு நீட்டிக்க கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். வங்கிகள் இணைப்புக்கு பிறகு பஞ்சாப் நேஷனல் வங்கி நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியாக உருவெடுத்துள்ளது.