முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1.10 கோடி வழங்கியது எஸ்.ஆர்.எம் குழுமம்!

 

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1.10 கோடி வழங்கியது எஸ்.ஆர்.எம் குழுமம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதால், அரசு கடும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்த பேரிடரிலிருந்து மக்களை காக்க தாராளமாக நிதி வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுக்கப்படும் பணம், கொரனோ தடுப்பு நடவடிக்கைக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் அதன் விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் என்றும் உறுதி அளித்திருந்தார்.

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1.10 கோடி வழங்கியது எஸ்.ஆர்.எம் குழுமம்!

முதல்வரின் கோரிக்கைக்கு இணங்க, பல தனியார் நிறுவனங்களும் சினிமா பிரபலங்களும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா குடும்பம் ரூ.1 கோடி, நடிகர் அஜித் ரூ.25 லட்சம், சன் டிவி குழுமம் ரூ.30 கோடி, திமுக அறக்கட்டளை ரூ.1 கோடி, சோஹோ நிறுவனம் ரூ.5 கோடி முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், பல தனியார் தொண்டு நிறுவனங்கள் நிதி திரட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில், முதல்வர் நிவாரண நிதிக்கு எஸ்.ஆர்.எம் குழுமம் ரூபாய் 1.10 கோடி நிதி வழங்கியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரை நேரில் சந்தித்த எஸ்.ஆர்.எம் குழுமத்தினர் காசோலையை வழங்கியுள்ளனர். அப்போது தலைமை செயலாளர் இறையன்பு, முதல்வரின் முதன்மை செயலாளர்கள் உடனிருந்தனர்.