ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் செப்பு தேரோட்டம்!

 

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் செப்பு தேரோட்டம்!

விருதுநகர்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருக்கல்யாண வைபவத்தையொட்டி, இன்று செப்புத தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருக்கல்யாணம் இன்று இரவு நடைபெற்றது. இதனையொட்டி, இன்று காலை செப்புத் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக காலை ஆண்டாள்- ரெங்கமன்னார் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் செப்பு தேரோட்டம்!

தொடர்ந்து, கோயிலில் இருந்து மங்கள இசைக்கருவிகள் முழங்க ஆண்டாள் ரெங்கமன்னார் செப்பு தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து,,ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை அடுத்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் செப்புத் தேரினை வடம்பிடித்து கோவிந்தா, கோபாலா கோஷம் முழங்க இழுத்துச்சென்றனர்.

ரத வீதிகள் வழியாக வலம் வந்த செப்புத்தேர் இறுதியாக நிலையை வந்தடைந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், கோவில் செயல் அலுவலர் இளங்கோவன் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர்.