ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தங்க தேரோட்டம் : பக்தர்கள் இன்றி நடைபெற்றது!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தங்க தேரோட்டம் : பக்தர்கள் இன்றி நடைபெற்றது!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொழுதுபோக்கு இடங்கள், கோயில்கள் மூடப்பட்டன. இருப்பினும்   ஆடி மாதம் துவங்கி இருப்பதால் கோயில்களில் திருவிழாக்கள் பக்தர்கள் இல்லாமல் நடத்த அனுமதி அளித்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தங்க தேரோட்டம் : பக்தர்கள் இன்றி நடைபெற்றது!

இதனிடையே  விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்தில் வரும் 24 ஆம் தேதி தங்கத்தேர் இழுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இன்றி தங்கத்தேர் இழுக்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி அனுமதியளித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தங்க தேரோட்டம் : பக்தர்கள் இன்றி நடைபெற்றது!

இந்நிலையில் இன்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் கோயிலில் தங்க தேரோட்டம் நடைபெற்றது. முதல்முறையாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் பக்தர்கள் இன்றி  நடைபெற்றது. இதில் ஆட்சியர் கண்ணன், தென்மண்டல ஐஜி பெருமாள், எம்எல்ஏ சந்திரபிரபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்