ஶ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா; நம்மாழ்வாருக்கு மோட்சம் தரும் நிகழ்வுடன் நிறைவு

 

ஶ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா; நம்மாழ்வாருக்கு மோட்சம் தரும் நிகழ்வுடன் நிறைவு

திருச்சி

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் நடந்து வந்த வைகுண்ட ஏகாதசி விழா, நம்மாழ்வாருக்கு பெருமாள் மோட்சம் தரும் நிகழ்ச்சியுடன் இன்று நிறைவு பெற்றது.

ஶ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா; நம்மாழ்வாருக்கு மோட்சம் தரும் நிகழ்வுடன் நிறைவு

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில், வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த மாதம் 14ஆம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்வுடன் தொடங்கியது. தொடர்ந்து, 15ஆம் தேதி முதல் பகல் பத்து உற்சவம் தொடங்கி 24ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதில், நம்பெருமாள், நாச்சியார் திருக்கோலம் எனும் மோகினி அலங்காரத்தில் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

ஶ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா; நம்மாழ்வாருக்கு மோட்சம் தரும் நிகழ்வுடன் நிறைவு


இதனையடுத்து, 25ஆம் தேதி அதிகாலை 4.45 மணியளவில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. இதனையெட்டி, அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் நம்பெருமாள் பாண்டியன் கொண்டைடை, கிளி மாலை, ரத்தின அங்கி அணிந்து புறப்பட்டு சந்தனு மண்டபம், ராஜமகேந்திரன் திருச்சுற்று, நாழிகேட்டான் வாயில், கொடிமரம், குலசேகரன் திருச்சுற்று, விரஜாநதி மண்டபம் வழியாக அரையர்கள் நாலாயிர திவ்வியப் பிரபந்த பாடல்களைப் பாடி வர, பெருமாளை பின் தொடர்ந்து வேத பாடல்களைப் பாடியபடி சென்றனர். அன்று முதல் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டிருந்தது. நடப்பு ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சொர்க்கவாசல் திறக்கப்பட்டபோது 24ம் தேதி மாலை 6 மணி முதல் 25ம் தேதி காலை 7 மணி வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை. காலை 7 மணிக்கு பிறகு, மற்ற நேரங்களில் கோயில் இணையதள முன்பதிவின் மூலம் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஶ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா; நம்மாழ்வாருக்கு மோட்சம் தரும் நிகழ்வுடன் நிறைவு


மேலும், தமிழ்ப் பாசுரங்களுக்கான விழா என்றழைக்கப்படும் இந்த விழாவில் நாலாயிர திவ்வியப் பிரபந்த பாடல்களை அபிநயத்துடன் பாடுவார்கள். விழாவின் மற்றுமொரு முக்கிய நிகழ்வான திருமங்கை மன்னன் வேடுபறி கடந்த ஒன்றாம் தேதி நடைபெற்றது. நேற்றுடன் இராப்பத்து நிறைவு பெற்றது. தொடர்ந்து வைகுண்ட ஏகாதேசியின் நிறைவு நாளான இன்று நம்மாழ்வாருக்கு நம்பெருமாள் மோட்சம் தரும் நிகழ்ச்சி திருமாமணி மண்டபத்தில் குறைந்த அளவிலான பக்தர்களுடன் அதிகாலை நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை 9.30 மணிக்கு நம்பெருமாள் திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைந்தார். இதனை அடுத்து இந்த ஆண்டு வைகுந்த ஏகாதசி நிகழ்ச்சி நிறைவடைகிறது.

ஶ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா; நம்மாழ்வாருக்கு மோட்சம் தரும் நிகழ்வுடன் நிறைவு


ஆங்கில ஆண்டு கணக்கில் 2020ல் 2 முறை சொர்க்கவாசல் திறப்பு.
ஜனவரி 6ஆம் தேதியும், இன்றும் திறக்கப்பட்டது. சொர்க்க வாசல் திறப்பு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை ஸ்ரீரங்கம் கோயில் இணையதளம், யூட்யூப்பிலும் நேரலை செய்யப்பட்டது . வைகுண்ட ஏகாதசி விழாவில் இன்று வரை சுமார் 7 லட்சம் பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்தனர். சொர்க்கவாசல் எனும் பரமபதவாசல் மட்டும் கடந்துசெல்ல ஆன்லைன் பதிவின்றியும் அனுமதிக்கப்பட்டனர்.

ஶ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா; நம்மாழ்வாருக்கு மோட்சம் தரும் நிகழ்வுடன் நிறைவு

இதன்படி, கடந்த 25ஆம் தேதி முதல் தினமும் தலா 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேர் வருகை தந்து, சுவாமி தரிசனம் செய்தனர் என்பது குறிபிடதக்கது. 2021 இந்த ஆண்டிற்கான வைகுந்த ஏகாதசி விழா வரும் டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி திருநெடுந்தாண்டகம்துடன் தொடங்கி 14ஆம் தேதி பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.