ஸ்ரீரங்கம் கோயில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

 

ஸ்ரீரங்கம் கோயில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

திருச்சி

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலய வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று திருச்சி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில், வைகுண்ட ஏகாதசி விழா வரும் 14ஆம் தேதி தொடங்கி, பகல் பத்து – ராப்பத்து என 21 நாட்கள் நடைபெறும் என்றும், இந்த விழா ஜனவரி 4 ஆம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஸ்ரீரங்கம் கோயில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

வரும் 15ஆம் தேதி முதல் பகல் பத்து திருநாள் தொடங்கி, 24 ஆம் தேதி பகல்பத்து திருவிழாவில் நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி அளிப்பார் என்றும், இந்த விழாவில் 1 முதல் 9ஆம் திருநாள் வரை, புறப்பாட்டுக்கு பின் பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளிய உடன் பக்தர்கள் போதிய சமூக இடைவெளி உடன் முககவசம் அணிந்து மாலை 7 மணி முதல் 8 மணி வரை 1 மணி நேரம் மட்டும் தரிசனத்துக்கு அனுமதிக்கப் படுவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது. மேலும், ராப்பத்து திருவிழாவின் முதல் நாளும், வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியும் ஆன சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு வரும் 24ஆம் தேதி மாலை 6 மணி முதல் 25ஆம் தேதி காலை 8 மணி வரை ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. டிசம்பர் 25ஆம் தேதி காலை 8 மணிக்கு பிறகு ஆன்லைனில் பதிவுசெய்த பக்தர்கள் அரசு வழிகாட்டுதலின்படி தரிசனம் அனுமதி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

ஸ்ரீரங்கம் கோயில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

மேலும், ராப்பத்து விழாவில், 7ஆம் நாள் திருவிழாவான டிசம்பர் 31ஆம் தேதி திரு கைத்தல சேவையும், 8ஆம் நாள் திருவிழாவான ஜனவரி ஒன்றாம் தேதி திருமங்கை மன்னன் வேடுபரி நிகழ்ச்சியும், 10ஆம் நாளும் வைகுண்ட ஏகாதசி விழாவின் நிறைவு நாளான தீர்த்தவாரி என ராப்பத்து விழாவின் முக்கிய 3 நிகழ்ச்சிகளுக்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வைகுண்ட ஏகாதேசி விழாவை 21 நாட்களும் கோயில் இணையதளத்தில் ( Srirangam temple) என்ற YouTube இணையதளத்திலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் பக்தர்கள் தடையின்றி கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பொதுமக்கள் யாரும் டிசம்பர் 24-ஆம் தேதி மாலை 6 மணி முதல் 25ஆம் தேதி காலை 8 மணி வரை ஸ்ரீரங்கத்திற்கு வரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.