ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேரோட்டம் – ஆயிரக்கண்க்கான பக்தர்கள் பங்கேற்பு!

ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேரோட்டம் – ஆயிரக்கண்க்கான பக்தர்கள் பங்கேற்பு!

திருச்சி

ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் பங்குனி தேர் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருச்சி ஶ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் பங்குனி தேர் திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி, நாள்தோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.

ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேரோட்டம் – ஆயிரக்கண்க்கான பக்தர்கள் பங்கேற்பு!

திருவிழாவின் 9ஆம் நாளான நேற்று பிற்பகலில் ஆண்டுக்கு ஒருமுறை நம்பெருமாளும் – தாயாரும் ஒன்றாக காட்சியளிக்கும், நம்பெருமாள் – தாயார் சேர்த்தி சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஆயிரக்கணக்கான தம்பதிகள் தரிசித்து சென்றனர்.

இந்த நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனையொட்டி, இன்று காலை 8 மணியளவிவில் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார்.

ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேரோட்டம் – ஆயிரக்கண்க்கான பக்தர்கள் பங்கேற்பு!

அப்போது, கோயிலில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என்ற கோஷம் விண் அதிர வடம்பிடித்து தேரை இழுத்து நம்பெருமாளை வழிபட்டு சென்றனர். தொடர்ந்து, நாளை இரவு ஆளும் பல்லக்கில் வீதி உலாவுடன் பங்குனி திருவிழா நிறைவு பெறுகிறது