ஹெச்.ராஜாவின் கொந்தளிப்பால் அரசின் அறிவிப்பு ரத்து!

 

ஹெச்.ராஜாவின் கொந்தளிப்பால் அரசின் அறிவிப்பு ரத்து!

திருச்சியிலுள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதசாமி திருக்கோயிலில் ஸ்ரீரங்கநாராயண ஜீயர் 51ஆவது பட்டத்திற்கு காலியாகவுள்ள பதவிக்கு நியமனம் செய்திட அறிவிப்பு ஒன்றை கோயில் அறங்காவலர் குழு வெளியிட்டுள்ளது. ஜீயர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஜூன் 8ஆம் தேதி மாலை 4 மணிக்கு வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஹெச்.ராஜாவின் கொந்தளிப்பால் அரசின் அறிவிப்பு ரத்து!

இது பாஜக ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ட்வீட் செய்த பாஜக தலைவர் ஹெச்.ராஜா, “இந்துவிரோத அரசின் முதல் இந்து விரோதச் செயல். அரசே ஜீயரை நியமிக்க முனைவது மிகப் பெரிய அராஜகம். கார்டினல் ஆர்ச்பிஷப் பாதிரியாரை நியமிக்கும் துணிச்சல் இந்த இந்து விரோதிகளுக்கு வருமா? வீதிக்கு வந்து போராடுவது தவிர வேறு வழியில்லை போலும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இச்சூழலில் ஜீயர் நியமன அறிவிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோயில் இணை ஆணையர் எஸ்.மாரிமுத்து கூறுகையில், “ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் ஜீயர் நியமனம் என்பது கோயில் நிர்வாகத்துக்கு உட்பட்டது. கோயில் நிர்வாகம் மூலம் தான் வழக்கமாக ஜீயர் நியமனம் செய்யப்படுகிறார். அவருக்கு ஊதியம் உண்டு. ஜீயராக பொறுப்பேற்கும்போதே கோயில் நிர்வாகத்துக்கு கட்டுப்பட்டு, கோயில் பணியாளராக என் பணிகளை செய்வேன் என கடிதம் கொடுப்பதுதான் நடைமுறையில் உள்ளது. தற்போது நிர்வாக காரணத்துக்காக ஜீயர் நியமனம் குறித்த அறிவிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது” என்றார்