#srirangam அதிமுக கோட்டைதான்; ஆனாலும் அவருக்கு ராசியில்லாமல் போனது ஏன்?

 

#srirangam அதிமுக கோட்டைதான்; ஆனாலும் அவருக்கு ராசியில்லாமல் போனது ஏன்?

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம்தான் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியின் அடையாளம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதி இது. ஆசியாவிலேயே 25 ஏக்கரில் அமைந்திருக்கும் வண்ணத்துப்பூச்சி பூங்கா இம்மண்ணின் பெருமை. தேசிய வாழை ஆராய்ச்சி மையம், நாவல்பட்டி தேசிய சட்டப்பள்ளி, டி.என்.பி.எல். காகித ஆலை என இத்தொகுதிக்கு பெருமை சேர்ப்பவை ஏராளம். அதிமுகவின் கோட்டையான இத்தொகுதியில் நமது டாப் தமிழ் நியூஸ் டீம் எடுத்த முடிவுகள் இதோ:

#srirangam அதிமுக கோட்டைதான்; ஆனாலும் அவருக்கு ராசியில்லாமல் போனது ஏன்?

அதிமுக கோட்டை:
ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுகவின் கோட்டையாக இருக்கிறது. 9 முறை அதிமுக இத்தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறது. 7 முறை தோல்வி அடைந்திருக்கும் திமுக ஒரு முறை மட்டுமே வென்றிருக்கிறது.

1977ல் அதிமுக வேட்பாளர் ஆர்.சவுந்தரராஜன், 80ல் மீண்டும் ஆர்.சவுந்தரராஜன், 84 தேர்தலிலும் ஆர்.சவுந்தராஜனே வெற்றி பெற்றார். 89ல் ஜனதா கட்சி வெங்கடேசுவர தீட்சிதர், 91ல் அதிமுக வேட்பாளர் ப.கிருஷ்ணன், 96ல் திமுக வேட்பாளர் டிபி மாயவன், 2001ல் அதிமுக வேட்பாளர் கே.கே.பாலசுப்பிரமணியன், 2006ல் எம்.பரஞ்சோதி, 2011ல் ஜெயலலிதா, 2015ல் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வளர்மதி வெற்றி பெற்றார். 2016ல் மீண்டும் வளர்மதி வெற்றி பெற்றார்.

#srirangam அதிமுக கோட்டைதான்; ஆனாலும் அவருக்கு ராசியில்லாமல் போனது ஏன்?

ஜெ., வுக்கு ராசியில்லாத தொகுதியா?

2011 சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தேர்தலில் வென்ற ஜெயலலிதா முதல்வர் ஆனார். ஆனால், 2014ல் சொத்துக்குவிப்பு வழக்கில் எம்.எல்.ஏ. பதவியை இழந்துவிட்டார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் நடந்த இடைத்தேர்தலில் வளர்மதி போட்டியிட்டு வென்றார். 2016ல் நடந்த சட்டமன்ற தேர்தலிலும் வளர்மதி போட்டியிட்டு வென்று அமைச்சராகவும் இருக்கிறார்.
முதல்வர் பதவி பறிபோனதால் ஜெயலலிதாவுக்கு இது ராசியில்லாத தொகுதி என்ற பேச்சு எழுந்தது.

#srirangam அதிமுக கோட்டைதான்; ஆனாலும் அவருக்கு ராசியில்லாமல் போனது ஏன்?

தொகுதி மக்களின் குரல்:

ஸ்ரீரங்கம் கோயிலை சுற்றி இருக்கும் மக்களுக்கு அடிமனை பட்டா இல்லாததுதான் முக்கிய பிரச்சனையாக இருந்து வருகிறது. 2011 பிரச்சாரத்தின்போது, இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று ஜெயலலிதா வாக்குறுதி கொடுத்தும், அவர் சொத்துக்கு குவிப்பு வழக்கில் சிக்கியதால் இன்றுவரை அந்த பிரச்சனை தீர்க்கப்படாமலேயே இருக்கிறது. அதனால், இந்த விவகாரத்திற்கு யார் உத்தரவு கொடுக்கிறார்களோ அவர்களூக்குத்தான் இந்த முறை ஓட்டு என்று பெரும்பாலானோர் சொல்கிறார்கள்.
குற்றங்கள் அதிகமாக இருக்குது. தெருவெங்கும் குப்பைகள், தண்ணீர் வசதி இல்லை என்று பலரும் புலம்புகின்றனர்.

நான் மட்டும் முதலமைச்சராக இருந்தா வாழ வழி இல்லாதவங்களுக்கு எல்லாம் ஒரு வழிகாட்டுவேன். அரசாங்கம் அதை சரியா செய்யல என்று ஆதங்கப்பட்ட லாரி டிரைவர், டாஸ்மாக்கை மூடவே கூடாது. உழைக்கும் மக்களுக்கு அதுவே உற்சாக பானம். ஆனா, நம்ம சரக்கில் சுத்தமாக ஒண்ணுமே இல்லை. வெளிநாட்டு அளவுக்கு தரமான சரக்குகள் வரவேண்டும் என்கிறார்.

#srirangam அதிமுக கோட்டைதான்; ஆனாலும் அவருக்கு ராசியில்லாமல் போனது ஏன்?

யாருக்கு ஓட்டு:

எனக்கு விபரம் தெரிஞ்ச போது எம்.ஜி.ஆருக்கு போட்டேன். அதுக்கு பிறகு அந்த அம்மாவுக்கு போட்டேன் . இப்போ யாருக்கு போடுறதுன்னு இனிமேதான் முடிவு பண்ணனும் என்கிறார் ஒருவர். நான் எப்பவுமே அம்மா கட்சிதான் என்கிறார்கள் பலரும். பெரும்பாலான பிராமணர்கள் பிஜேபிக்குத்தான் தங்கள் ஆதரவு என்கின்றனர். கமல், ரஜினி ஆட்சிக்கு வரவேண்டும் என்று நிறைய பேர் எதிர்பார்க்கிறார்கள். கமல் வந்தாலாவது ஏதாவது செய்வாருன்னு எதிர்பார்க்கிறோம் என்கிறார்கள் ஏக்கத்துடன்.

#srirangam அதிமுக கோட்டைதான்; ஆனாலும் அவருக்கு ராசியில்லாமல் போனது ஏன்?

யாருக்கு வெற்றி:
மக்களின் எண்ணத்தை வைத்து பார்த்தால் இப்போது ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுகவின் கோட்டையாகவே இருக்கிறது. ஆனாலும் சில அதிருப்திகளும் இருக்கத்தான் செய்கிறது. இந்த தேர்தலை பொறுத்தவரைக்கும் அதிமுகவுக்கே வெற்றி வாய்ப்பு என்று தெரிகிறது. எடப்பாடி ஆட்சிக்கு பலரும் 10க்கு 10 மார்க் வழங்குகிறார்கள். அதிமுக, திமுகவுக்கு அடுத்தபடியாக மக்கள் நீதி மய்யத்திற்கு இந்த தொகுதியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.