சுயேட்சை வேட்பாளர்களாக களமிறங்கும் சின்னம்மா பேரவை அமைப்பினர்!

 

சுயேட்சை வேட்பாளர்களாக களமிறங்கும் சின்னம்மா பேரவை அமைப்பினர்!

அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயல‌லிதாவின் பொற்கால ஆட்சி அமைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் அறிக்கை என சசிகலா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “நான் என்றும் பதவிக்காகவோ, அதிகாரத்திற்காகவோ, ஆசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தலில் பணியாற்றிட வேண்டும். ஜெயல‌லிதாவின் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். நான் என்றும் பதவிக்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.

சுயேட்சை வேட்பாளர்களாக களமிறங்கும் சின்னம்மா பேரவை அமைப்பினர்!

இந்நிலையில் தமிழ்நாடு தியாகத்தலைவி சின்னம்மா பேரவை தலைவர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் தமிழக தியாகத்தலைவி சின்னம்மா பேரவை மாநிலத்தலைவர் காகனம் மு.சீனிவாசன் அவர்கள் பேரவை நிலைப்பாடு குறித்தும், மாநில நிர்வாகிகள் ஆலோசனை பேரிலும் சுயேட்சை வேட்பாளராக சுமார் 125 தொகுதிகளில் போட்டியிட எங்களது மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கலந்து ஆலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டது” எனக் குறிப்பிடப்பட்டிள்ளது. இதுகுறித்து மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் நாளை பத்திரிக்கையாளர்களை சந்தித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளனர்.