உலகிலேயே முதல் பைலட் ராவணன் தான்! இது என்ன புது கதையா இருக்கு?

 

உலகிலேயே முதல் பைலட் ராவணன் தான்! இது என்ன புது கதையா இருக்கு?

உலகிலேயே முதன்முதல் விமானத்தை இயக்கியவன் தங்களின் பேரரசன் ராவணன் தான் என இலங்கை அரசு அரசு தெரிவித்துள்ளது.

புலவர் வால்மீகி இயற்றிய ராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரம் ராவணன். இலங்கையை ஆண்ட பேரரசான ராவணன், தன் தங்கையின் மூக்கை லட்சுமணன் அறுத்ததற்கு பழிவாங்க புஷ்பக விமானத்தில் இலங்கையிலிருந்து இந்தியா வந்து சீதையை கவர்ந்து செல்வதாக புராணங்களில் கூறப்படுகிறது.

உலகிலேயே முதல் பைலட் ராவணன் தான்! இது என்ன புது கதையா இருக்கு?

ராவணன், இலங்கையிலிருந்து இந்தியா செல்லவும், அங்கிருந்து திரும்பி வரவும் 5000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, விமானத்தை பயன்படுத்தியதாக இலங்கை அரசு கூறுகிறது. இதை ஆவணப்படுத்த வதற்காக, பழங்கால புத்தகங்கள், இலக்கியங்கள் மற்றும் ஆராய்ச்சிக் குறிப்புகள் தெரிந்தால் தகவல்களை வழங்கி பொதுமக்கள் உதவ வேண்டும் என்றும் இலங்கையின் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சகம் விளம்பரம் வெளியிட்டுள்ளது. மேலும் இதுதொடர்பான ஆராய்ச்சிகள் செய்து ஐந்து ஆண்டுகளில் இதனை நிரூபிப்போம் என்றும் தெரிவித்துள்ளது.