இந்தியாவிலிருந்து விமானங்கள் வருவதற்கு தடை – இலங்கை அதிரடி!

 

இந்தியாவிலிருந்து விமானங்கள் வருவதற்கு தடை – இலங்கை அதிரடி!

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவல் வீரியமாக இருக்கிறது. இரண்டு நாட்கள் குறைவது போல் குறைந்து பின்னர் மீண்டும் வேகமெடுக்கிறது. இதனால் நாட்டு மக்கள் அனைவரும் பீதியில் இருக்கின்றனர். தினசரி உயிரிழப்புகள் படிபடியாகக் கூடி 4 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. உபி, குஜராத் ஆகிய மாநிலங்களில் சடலங்களை நடைபாதையில் போட்டு எரிக்கும் அவலங்களும் ஏற்பட்டுள்ளன. ஆக்சிஜன் இல்லாமல் வெவ்வேறு மாநிலங்களில் பலர் உயிரிழக்கின்றனர்.

Sri Lanka imposes new restrictions on flights amidst rising COVID-19 cases  | Times of India Travel

மூன்றாம் அலை தவிர்க்க முடியாதது என மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் விஜய்ராகவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அது எப்போது வந்தாலும் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு நடுவே உலகின் பிற நாடுகள் இந்தியாவிலிருந்து விமானங்கள் வருவதற்குத் தடை விதித்துள்ளன.

இந்தியாவிலிருந்து விமானங்கள் வருவதற்கு தடை – இலங்கை அதிரடி!

தற்போது அந்நாடுகளில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழலில், இந்தியர்கள் வந்தால் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் என்பதால் இம்முடிவை எடுத்திருக்கிறார்கள். இச்சூழலில் அண்டை நாடான இலங்கை இந்தியாவிலிருந்து வருவதற்குத் தடை விதித்திருக்கிறது. இதற்கு முன்னதாக நியூஸிலாந்து, பிரிட்டன், அமெரிக்கா, ஈரான் ஆகிய நாடுகள் தடை விதித்திருந்தன. இருப்பினும் இந்தியாவிற்குத் தேவையான உதவிகளைச் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளன.