Home ஆன்மிகம் அஷ்ட ஐஸ்வரியத்தையும் தரும் அலைமகளின் ஸ்ரீ சூக்தம்!

அஷ்ட ஐஸ்வரியத்தையும் தரும் அலைமகளின் ஸ்ரீ சூக்தம்!

அலைமகளின் அருள் சுரக்கும் தினமாகவும் திகழும் நவராத்திரின் திருநாளில் அலைமகளாம் மகாலட்சுமியை வழிபட்டால், நம் வீட்டில் அஷ்ட ஐஸ்வரியங்களும் குறையாது பெருகும். அதிலும் திருமகளின் மகிமைகளை அறிந்து வழிபட்டால், நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் நீக்கமற நிறைந்திருக்கும். வேதங்கள் திருமகளைப் பலவாறு போற்றுகின்றன. ஸ்ரீ சூக்தம் அலைமகளைப் போற்றும் முதன்மையான நூல். சிவமகா புராணத்திலுள்ள காசிக்காண்டத்தில் இடம்பெற்றுள்ள பகுதி லட்சுமி பஞ்சகம். பக்தர்கள பலரும் திருமகள் திருவருளைப் பெறும் வகையில் அவளைப் போற்றி துதித்துள்ளனர். “ஸ்ரீ சூக்தம்” ஓம் ஹிரண்யவர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண ரஜ தஸ்ராஜாம் ” என்று ஆரம்பிக்கும் சூக்தம் இது, வேதங்களிலும், புராணங்களிலும் காணப்படும் மகாலட்சுமியின் பல்வேறு துதிகளின் தொகுப்பே ஆகும். உலக வாழ்க்கைக்கு இன்றியமையாதது செல்வம். அதை வேண்டி பிரார்த்தனை செய்வதாக அமைந்துள்ளது இந்த ஸ்ரீ சூக்தம். இதனை தொடர்ந்து வீட்டில் பாராயணம் செய்வதன் மூலம் அளப்பரிய செல்வ வளமும் மகாலட்சுமியின் கடாட்சமும் நீக்கமற நிலைத்திருக்கும்.

அஷ்ட ஐஸ்வரியத்தையும் தரும் அலைமகளின் ஸ்ரீ சூக்தம்!
வறுமை நீங்கி செல்வ செழிப்புடன் வாழ ஶ்ரீமகாலட்சுமி வழிபாடு! - TopTamilNews

இந்த சூக்தத்தின் விளக்கம்..
எல்லாவற்றையும் அறியும் அக்னி தேவனே! பரமனே! பொன்னின் நிறம் கொண்டவளும், பாவங்களை போக்குபவளும், தங்க ஆபரணங்களை அணிந்தவளும்
லட்சுமி என அழைக்கும் திருமகளை என்னிடம் எழுந்தருள செய்வாய்.

அஷ்ட ஐஸ்வர்யங்களும் தரும் திருமகளை என்னிடமிருந்து எப்பவும் விலகாதிருக்க செய்ய வேண்டுகிறேன். மகிழ்ச்சி நிறைந்தவளே, தாமரை மலரில் வீற்றிருப்பவளே இங்கு வந்து வாசம் செய்திட வேண்டுகிறேன். செல்வத்தின் தலைவன் குபேரனும், புகழின் தேவனும் என்னிடம் வர அருள் புரிவாய். எனது இல்லத்தில் அனைத்துவிதமான ஏழ்மைகளையும், வறுமைகளையும் அகற்றி சுபிக்ஷம் தருவாயாக..!

மதியழகி : மகாலட்சுமி வழிபாடு பற்றிய 100 தகவல்கள்!

நறுமணத்தின் இருப்பிடமே, எவராலும் வெல்ல முடியாதவளே மகா லட்சுமியே சகல ஐஸ்வர்யங்களும் எனக்கு அருள வேண்டுகிறேன்.

இந்த சூக்தத்தை தினமும் பாராயணம் செய்துவந்தால் மகா லட்சுமியின் பரிபூர்ண கடாக்ஷம் கிடைக்கும். வீட்டில், சர்வ ஐஸ்வர்யங்களும் வந்து சேரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

லோகா சமஸ்தா சுகினோ பவந்து.

அஷ்ட ஐஸ்வரியத்தையும் தரும் அலைமகளின் ஸ்ரீ சூக்தம்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

நாளை இவர்களுக்கு மட்டும் முழு ஊரடங்கிலிருந்து விலக்கு!

தமிழக முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து கொரோனா நிவாரண நிதிக்கு தான். அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.2,000 இரண்டு தவணையாக வழங்கப்படுமென அறிவித்தார். அதில், முதல் தவணையை...

எனது செயல்பாட்டின் அடிப்படையில் என்னை மதிப்பீடு செய்யுங்கள்! நிதியமைச்சர் டி.பி.ஆர். தியாகராஜன்

தமிழ்நாட்டின் நிதியமைச்சராக பொறுப்பேற்றபின் தன்னை தயாள குணம் கொண்ட வகையில் வாழ்த்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக நிதியமைச்சர் டி.பி.ஆர் தியாகராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

“90நாட்களில் 5 கோடி தடுப்பூசிகள் வேண்டும்” உலகளாவிய டெண்டர் கோரியது தமிழக அரசு!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 18 வயதிலிருந்து 45...

முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ₹25 லட்சம்

தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையால், அரசு பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது.
- Advertisment -
TopTamilNews