darbar
  • January
    27
    Monday

Main Area

Main



ஸ்ரீரெட்டியின் அடுத்த லீக்: நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்கத்தில் பதவியில் இருப்பவர்: விரைவில் முகத்திரையை கிழிப்பேன்!

srireddy
srireddy

சென்னை: நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் பதவியை வைத்துக் கொண்டு அத்துமீறலில் ஈடுபடுகிறார் என்று ஒருவரது பெயரை குறிப்பிடாமலே  ஸ்ரீரெட்டி சாடியுள்ளார்.

தமிழ்-தெலுங்கு திரையுலகில் திரைப்பட வாய்ப்புக் கேட்கும் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக தெலுங்கு நடிகர்கள் சங்க அலுவலகம் முன்பு ஆடையைக் களைத்து அரை நிர்வாண போராட்டம் நடத்திப் பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர், தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை அடுக்கி அதிர்வலையை ஏற்படுத்தினார்.

இதனிடையே அவருடைய வாழ்க்கை கதை `ரெட்டி டைரி' என்ற பெயரில் படமாகி வருகிறது. இந்தப் படத்தில் நடிகை ஸ்ரீரெட்டி தற்போது நடித்து வருகிறார். நடிகர் ராகவா லாரன்ஸ், அவரது அடுத்த படத்தில் நடிக்க ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பளித்து அதற்கான அட்வான்ஸ் தொகையைக் கொடுத்ததாகவும் தனது பேஸ்புக் பக்கத்தில் ஸ்ரீரெட்டி கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி தனது  ஃபேஸ்புக் பதிவில் , 'பல ஹீரோயின்கள் மற்றும் துணை நடிகைகளை பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்திய அந்த நபர் மீடியா முன்பு புத்திசாலித்தனமாக பேசி வருகிறார். அவரைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். என்னிடம் உள்ள ஆதாரங்கள் மூலம் வழக்கறிஞர்களின் உதவியுடன் அவருடைய முகத்திரையை விரைவில் வெளியே கொண்டு வருவேன். நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் பதவியை வைத்துக் கொண்டு அவர் செய்யும் அத்துமீறல்கள் விரைவில் வெளிப்படும்' என்று கூறியுள்ளார்.

 

'விரைவில் திருமணமாகவுள்ள அவர் நம்பர் ஒன் பிளாக் மெயிலர். விரைவில் அவருக்குச் சிறை காத்திருக்கிறது. பெரிய பதவியை கையில் வைத்துக் கொண்டு பல தயாரிப்பாளர்களை மிரட்டி வருகிறார். தயாரிப்பாளர்கள் கோபப்பட்டால் அந்த நபரின் பதவி ஆட்டம் கண்டுவிடும். அவரால் பல சின்ன தயாரிப்பாளர்கள் பல துன்பங்களை அடைந்துள்ளார்கள்' என்று மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
 

2018 TopTamilNews. All rights reserved.