• February
    16
    Sunday

Main Area

Main



இலங்கையில் கூடிய இரட்டைப்பிறவிகள்.கின்னஸ் சாதனை முயற்சி!

 ராஜ பக்சே
ராஜ பக்சே

உலகிலேயே அதிக இரட்டையர்கள் ஒரே இடத்தில் கூடி கின்னஸ் சாதனை செய்திருக்கிறார்கள். ஏற்கனவே தைவானில்.1999-ல் நடந்த இது போன்ற ஒரு முயற்சியில் 3961 இரட்டையர்கள் கலந்து கொண்டனர்.அதில் நான்கு பேராகச்  சேர்ந்து பிறந்த நான்கு சகோதரர்களும் இருந்தனர்.

twins

அந்தக் சாதனையை  முறியடடிக்கும் முயற்சியாக இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று ஒரு முயற்சியைத் துவங்கி இருக்கிறார்கள்.நகரில் உள்ள ஒரு ஸ்டேடியத்தில் இரட்டையர்கள் வந்து குவிந்தனர்.இவர்களின் பர்த் சர்டிஃபிகேட்களை சரிபார்த்து பதிவு செய்யும் பணி துவங்கி முழுவீச்சில் நடந்து வருகிறது. 

twins

இந்த முயற்சியை முன்னெடுத்து ஒருங்கினைத்த ‘உபுளி அமகே’ தனது இரட்டைப் பிறவியான சாமளியுடன் இந்தப் பணியில் மும்முரமாக இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ராஜ பக்சே கலந்து கொள்ள இருக்கிறார். இதில் சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் ஓய்வு பெற்று பெண்ஷன் வாங்கும் ஆசாமிகள் வரை கலந்து கொள்கிறார்கள்.இரண்டு போலீஸ் இரட்டையரும் வந்திருந்தது சுவாரஸ்யாமாக இருந்தது.

srilanka

இந்த முயற்சி தைவானை வெல்லுமா என்பது இன்று கணக்கெடுப்பு முடிந்த பிறகுதான் தெரியவரும்.

2018 TopTamilNews. All rights reserved.