‘இவர்களுக்காவது கொரோனா தடுப்பூசி போடுங்கள்’ இலங்கை எம்.பி வேண்டுகோள்

 

‘இவர்களுக்காவது கொரோனா தடுப்பூசி போடுங்கள்’ இலங்கை எம்.பி வேண்டுகோள்

கொரோனா தொற்றுக்குள் சிக்காத நாடுகளே இல்லை என்று சொல்லிவிடலாம். ஏனெனில், கடந்த டிசம்பரில் உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகின் அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 7 கோடியே 26 லட்சத்து 46 ஆயிரத்து 646 பேர்.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 5 கோடியே 8 லட்சத்து 64 ஆயிரத்து 816 நபர்கள்.

‘இவர்களுக்காவது கொரோனா தடுப்பூசி போடுங்கள்’ இலங்கை எம்.பி வேண்டுகோள்

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 16 லட்சத்து 18 ஆயிரத்து 908 பேர். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 2,01,62,922 பேர்.

கொரோனாவை சாமார்த்தியமாகக் கையாண்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று. கொரோனா தொற்று தொடங்கியதுமே முன் எச்சரிக்கையோடு நடந்துகொண்டு கொரோனாவைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டது. ஆனால், தற்போது இரண்டாம் அலை வீசியபோது இலங்கையால் கட்டுப்படுத்துவதில் பெரும் சிக்கல் எழுந்தது.

இலங்கையில் தற்போது கொரோனாவின் மொத்த பாதிப்பு 32,790 பேர். இவர்களில் 23,793 பேர் குணமடைந்துவிட்டனர். 152 பேர் மரணமடைந்துவிட்டனர்.

‘இவர்களுக்காவது கொரோனா தடுப்பூசி போடுங்கள்’ இலங்கை எம்.பி வேண்டுகோள்

இந்நிலையில் இலங்கைக்கு அடுத்த வருடம் மத்தியில்தான் கொரோனா தடுப்பூசி வர வாய்ப்பு இருப்பதாக இலங்கை அரசு அதிகாரிகள் தரப்பில் சில நாட்களுக்கு முன் தெரிய வதது.

இந்நிலையில் ‘இலங்கையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனா கட்டுப்படுத்தும் பணியில் இருக்கும் முன்கள வீரர்களுக்காவது கொரோனா தடுப்பூசியை வர வழைத்து செலுத்துங்கள்’ என்று இலங்கையின் எம்பி சமிபிக ரணவக்க வேண்டுகோள் வைத்திருக்கிறார்.