இந்திய மீனவர்களின் 121 படகுகளை அழிக்க, இலங்கை நீதிமன்றங்கள் உத்தரவு

இந்திய மீனவர்களின் 121 படகுகளை அழிக்க, இலங்கை நீதிமன்றங்கள் உத்தரவு

இலங்கை

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 121 இந்திய மீனவர்களின் படகுகளை அழிக்க, அந்நாட்டு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளன. கடந்த 2015 முதல் 2018 ஆம் ஆண்டு வரையில் இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 94 இந்திய படகுகளை ஊர்க்காவல்துறை நீதிமன்றமும், 37 இந்திய படகுகளை மன்னார் நீதிமன்றமும், தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்டன.

இந்திய மீனவர்களின் 121 படகுகளை அழிக்க, இலங்கை நீதிமன்றங்கள் உத்தரவு

இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க கடந்த 2018ஆம் ஆண்டு இரு நீதிமன்றங்களும் அனுமதி வழங்கியது. அதன்பேரில் இந்தியாவில் இருந்து சென்ற மீனவ அமைப்புகள் அவற்றில் நல்ல நிலையில் இருந்த 10 படகுகளை மட்டும் எடுத்துக்கொண்டு, முழுமையாக பழுதான மற்றும் எடுத்துச்செல்ல முடியாத நிலையில் இருந்த 121 படகுகளை அங்கேயே

இந்திய மீனவர்களின் 121 படகுகளை அழிக்க, இலங்கை நீதிமன்றங்கள் உத்தரவு

விட்டுச்சென்றனர். இதனால் அந்த படகுகள் நீண்ட காலம் கடலிலேயே கிடந்த வந்த நிலையில், இதுகுறித்து இலங்கை நீரியல் திணைக்களம் சார்பில் சம்பந்தபட்ட இரு நீதிமன்றங்களிலும் முறையீடு செய்யப்பட்டது. அதன் பேரில் மன்னார் மாவட்டத்தில் உள்ள 27 படகுகளையும், ஊர்க்காவல்துறை பகுதியில் இருந்த 97 படகுகளையும் அழிக்கவோ அல்லது பொதுஏலத்தில் விடவோ இரு நீதிமன்றங்களும் அனுமதி வழங்கின.