இலங்கையில் ஆகஸ்ட் 1 அன்று கொழும்பு சர்வதேச விமான நிலையம் திறக்கப்படாது

 

இலங்கையில் ஆகஸ்ட் 1 அன்று கொழும்பு சர்வதேச விமான நிலையம் திறக்கப்படாது

கொழும்பு: இலங்கையில் ஆகஸ்ட் 1 அன்று கொழும்பு சர்வதேச விமான நிலையம் திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 2,000-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இதுவரை 11 பேர் மட்டுமே இறந்துள்ளனர். ஜூன் 1 முதல் இலங்கையில் கொரோனாவால் யாரும் இறக்கவில்லை. வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த அனைவருக்கும் சுகாதார அதிகாரிகள் கொழும்பு விமான நிலையத்தில் பி.சி.ஆர் சோதனை முறையை மேற்கொள்கின்றனர். மேலும் அவர்கள் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்தவுடன் தனிமைப்படுத்தப்பட்டனர்.

கொரோனா வைரஸ் தொற்று நோயைக் கருத்தில் கொண்டு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைத் தொழிலாளர்களை தங்கள் நாட்டிற்கு திரும்ப அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைச் இலங்கை அரசு மும்முரமாக செய்து வருகிறது. இதன் காரணமாக இலங்கையில் கொழும்பு சர்வதேச விமான நிலையம் ஏற்கனவே திட்டமிட்டபடி ஆகஸ்ட் 1-ஆம் தேதி திறக்கப்படாது எனவும், அது மேலும் தாமதமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.