கொரோனாவைக் கட்டுப்படுத்தியதில் இலங்கை 2-ம் இடம்? – ’நம்பாதீங்க’ எதிர்கட்சிகள்

கொரோனாவைக் கட்டுப்படுத்தியதில் இலங்கை 2-ம் இடம்? – ’நம்பாதீங்க’ எதிர்கட்சிகள்

கொரோனா நோய்த் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. வல்லரசு நாடுகளும் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த தடுமாறி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 67 லட்சத்து 53 ஆயிரத்து 910 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 76 லட்சத்து 67 ஆயிரத்து 554 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 10 லட்சத்து 66 ஆயிரத்து 856 பேர்.

கொரோனாவைக் கட்டுப்படுத்தியதில் இலங்கை 2-ம் இடம்? – ’நம்பாதீங்க’ எதிர்கட்சிகள்

கொரோனா நோய்த் தொற்று பரவத் தொடங்கியதுமே சில நாடுகள் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு தங்களைத் தற்காத்துக்கொண்டன. அவற்றில் ஒன்று இலங்கை.

சீன நிறுவனம் ஒன்று, கொரோனாவைக் கட்டுப்படுத்தியதில் இலங்கை இரண்டாம் இடத்தில் இருப்பதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

கொரோனாவைக் கட்டுப்படுத்தியதில் இலங்கை 2-ம் இடம்? – ’நம்பாதீங்க’ எதிர்கட்சிகள்

ஆனால், இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த விவாதம் வேறொன்றைச் சொல்கிறது. இலங்கையின் எதிர்கட்சியைச் சேர்ந்த லஷ்மன் கிரியெல்ல பேசுகையில், ‘சீன அரசு அறிவித்த அறிக்கையில் உள்ளவற்றை நம்பாதீர்கள். அது பொய்யாக உருவாக்கப்பட்டவை” என்று கூறியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், “இலங்கை தேர்தலை நடத்தவே கொரோனா குறித்த தகவல்களை இலங்கை அரசு மறைத்து விட்டதாகவும்” கடுமையாக தெரிவித்துள்ளார்.