இலங்கை LPL – அரையிறுதிக்கு செல்லும் அணிகள் இவைதாம்!

 

இலங்கை LPL – அரையிறுதிக்கு செல்லும் அணிகள் இவைதாம்!

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் உலகளவில் தனி கவனத்தை ஈர்த்துவிட்டன. அதனால், அதுபோலவே உலகின் பல நாடுகளிலும் நடைபெற தொடங்கி விட்டன. இலங்கையில் LPL போட்டிகள் கடந்த எட்டாண்டுகளாக நடைபெற்று வருகின்றன.

இதில், கண்டி டஸ்கஸ், கொழும்பு கிங்ஸ், தம்புள்லை ஹோர்கஸ், ஜப்னா ஸ்டாலியன்ஸ், காலி கிளாடியேட்டர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் விளையாடுகின்றன.

ஐந்து அணிகள் தங்களுக்கு மோதி அரையிறுதிக்குத் தகுதி பெறும். அவற்றில் இரு அணிகள் இறுதிப் போட்டியில் மோதும்.

இலங்கை LPL – அரையிறுதிக்கு செல்லும் அணிகள் இவைதாம்!

இப்போது போட்டியின் உச்சகட்டம் நோக்கி நகந்துகொண்டிருக்கிறது. ஆமாம் அணிகளின் வெற்றிகளை அடிப்படையில் கிடைத்த புள்ளிகளின் அடிப்படையில் நான்கு அணிகள் அரையிறுதிக்குத் தேர்வாகியுள்ளன. அவை எவை என்று பார்ப்போம்.

இதுவரை ஒவ்வொர் அணியும் தலா எட்டுப் போட்டிகளில் ஆடியுள்ளன. அவற்றில் அடிப்படையில், கொழும்பு கிங்ஸ் அணி ஆறு போட்டிகளில் வென்று 12 புள்ளிகளோடு முதலிடத்தைப் பிடித்துள்ளது.

தம்புள்லை ஹோர்கஸ் 5 போட்டிகளில் வென்று, இரண்டில் தோற்று ஒன்றில் டிராவாகி 11 புள்ளிகள் எடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளது.

இலங்கை LPL – அரையிறுதிக்கு செல்லும் அணிகள் இவைதாம்!

ஜாப்னா ஸ்டாலியன்ஸ் அணி 4 போட்டிகளில் வென்று 3-ல் தோற்று, 1- டிராவாகியுள்ளது. எனவே 9 புள்ளிகளோடு மூன்றாம் இடத்தில் உள்ளது.

காலி கிளாடியேட்டர்ஸ் அணி 2 போட்டிகளில் வென்று , 6-ல் தோற்று 4 புள்ளிகல் எடுத்து நான்காம் இடத்தில் உள்ளது. இதே நிலையில்தான் கண்டி அணி இருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு காலி கிளாடியேட்டர்ஸ் தகுதிப் பெற்றிருக்கிறது.

கண்டி அணி இந்தத் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறது.