இலங்கை எல்.பி.எல் – கண்டி அணியின் முக்கிய வீரருக்கு கொரோனா

 

இலங்கை எல்.பி.எல் – கண்டி அணியின் முக்கிய வீரருக்கு கொரோனா

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் புகழ்பெற்றவை. அதேபோலவே பல நாடுகளிலும் லீக் போட்டிகள் நடந்த ஆரம்பித்துவிட்டனர். இலங்கையில் எல்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள், 2012 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. ஐந்து அணிகளாகப் பிரிந்து ஆடப்படும் போட்டிகள் பெரும்பாலும் மாலை நேரத்தில் நடப்பதாகவே திட்டமிட்டப்படுகிறது. கிட்டத்தட்ட ஐபிஎல் போட்டிகளைப் போலவேதான்.

இலங்கை எல்.பி.எல் – கண்டி அணியின் முக்கிய வீரருக்கு கொரோனா

இந்த அண்டு எல்.பி.எல் போட்டிகள் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் பல முறை ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது நவம்பர் 26 -ம் தேதி தொடங்கும் எல்.பி.எல் தொடரில் டிசம்பர் 10-ம் தேதி வரை லீக் போட்டிகளும், டிசம்பர் 13 மற்றும் 14 -ம் தேதிகளில் அரையிறுதிப் போட்டிகளும், டிசம்பர் 18-ம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெற விருக்கிறன.

இலங்கை பிரீமியர் லீக்கில் முக்கிய அணியான கண்டி டஸ்கர்ஸ் டீமில் முக்கிய வீரருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எல்.பி.எல் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டும், தனிமையில் இருக்க வைத்துமே விளையாட அனுமதிக்கப்படுகிறார்கள். கொரோனா தொற்று காரணமாக ஒரே மைதானத்தில்தான் அனைத்துப் போட்டிகளும் நடத்தப்பட விருக்கின்றன.

இலங்கை எல்.பி.எல் – கண்டி அணியின் முக்கிய வீரருக்கு கொரோனா

இந்நிலையில் கண்டி அணி வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் சொஹைல் தன்வீர், கண்டி அணிக்காக ஆடி வருகிறார். நேற்றுதான் இலங்கைக்கு வந்தார் தன்வீர். அப்போது எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு பாசிட்டிவ் என முடிவு வந்தது. இனி, அவர் சிகிச்சை எடுத்து ஆடுவாரா.. அல்லது பாகிஸ்தானுக்கே சென்றுவிடுவாரா என்பது நாளைதான் தெரியவரும்.