இலங்கையில் மின்னல் வேகத்தில் நடைபெறும் பொதுத்தேர்தல் பணிகள்…. 7452 பேர் தேர்தலில் போட்டி!

 

இலங்கையில் மின்னல் வேகத்தில் நடைபெறும் பொதுத்தேர்தல் பணிகள்…. 7452 பேர் தேர்தலில் போட்டி!

இலங்கையில் நாளை மறுதினம் (05.08.2020) நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்து 3 ஆயிரத்து 682 பேரும், சுயேட்சைக்குழுக்களின் சார்பில் 3 ஆயிரத்து 800 பேர் என மொத்தமாக 7 ஆயிரத்து 452 பேர் போட்டியிடுகின்றனர்.

ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 874 பேர் வாக்களிப்பதற்கு தகுதிப்பெற்றுள்ளனர். பொதுத் தேர்தலுக்கான 12 ஆயிரத்து 985 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இலங்கை முழுவதும் 71 வாக்கு எண்ணும் மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் மின்னல் வேகத்தில் நடைபெறும் பொதுத்தேர்தல் பணிகள்…. 7452 பேர் தேர்தலில் போட்டி!
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 5 மாதங்களுக்குப் பின் நடைபெறும் இந்தப் பொதுத் தேர்தல் இலங்கை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 10 முதல் 14 நாட்களுக்குள் வேட்புமனுக்கள் கோரப்பட வேண்டும் என்பதுடன், வேட்புமனுக்கள் கோரப்பட்டு ஐந்து முதல் ஏழு வாரங்களுக்குள் பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும். என்றாலும் அதிபர் கோட்டாபய ராஜபக்சவால் கடந்த மார்ச் 1-ந்தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருந்த போதிலும் திடீரென இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததால் ஐந்து மாதங்களுக்குப் பிறகு தேர்தல் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.

இலங்கையின் தலைவிதியை தீர்மானிக்கப்போகின்ற நாளாக ஆகஸ்ட் 5 ஆம் தேதி மாறியுள்ளது. அன்றைய தினம் வாக்களிப்பு முடிவடைந்ததும் மறுநாள் (06.08.2020) காலை 8 மணி முதலே வாக்கெண்ணும் பணி ஆரம்பமாகும். அன்று நள்ளிரவுக்குள் ஆளப்போவது யாரென்பது தெரியவரும். வேட்பாளர்கள் பெற்றுக்கொள்ளும் விருப்ப வாக்குகள் 7ஆம் தேதியே வெளியிடப்படவுள்ளன.

இலங்கையில் மின்னல் வேகத்தில் நடைபெறும் பொதுத்தேர்தல் பணிகள்…. 7452 பேர் தேர்தலில் போட்டி!
அடுத்தவார இறுதியில் புதிய அமைச்சரவையும் பதவியேற்கும் எனத் தெரிய வருவதுடன், தேர்தல் ஆணைக்குழுவின் வர்த்தமானி வெளியானதும் 20ஆம் தேதிக்கு முன்னர் 9ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வுக்கான அதிவிசேட வர்த்தமானியையும் அதிபர் வெளியிடுவார் எனவும் அறிய முடிகிறது.
கபே, பெப்ரல் உட்பட பல உள்நாட்டு, சர்வதேச கண்காணிப்பு அமைப்புகளும் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. பொதுத்தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவுடன் நிறைவுபெற்றது. கடந்தகாலங்களை போல் பிரச்சார நடவடிக்கைகள் பிரமாண்ட முறையில் நடைபெறவில்லை. சுகாதார அமைச்சகத்தின் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பான முறையில் கூட்டங்களை நடத்தியுள்ளனர்.