ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு ஜிஎஸ்டி; ரூ.995 விற்பனை!

 

ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு ஜிஎஸ்டி; ரூ.995 விற்பனை!

ரஷ்ய தயாரிப்பு தடுப்பூசி ஆன ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்திய சந்தையில் அடுத்த வாரம் முதல் விற்பனைக்கு வரவுள்ளது . ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஜூலை மாதம் முதல் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் நிலையில முதற்கட்டமாக 15.6 கோடி டோஸ்கள் தயாரிக்கப்பட உள்ளது. இதன்மூலம் ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் 216 கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு ஜிஎஸ்டி; ரூ.995 விற்பனை!

உலகிலேயே கொரோனாவுக்கு எதிராக ரஷ்யா தான் முதலில் தடுப்பூசியை கண்டுபிடித்தது .ஸ்புட்னிக் வி என்ற இந்த தடுப்பூசி பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில் தற்போது இந்தியாவில் இது பயன்பாட்டுக்கு வர உள்ளது. இது கொரோனாவுக்கு எதிராக 91.6 சதவீதம் செயல்திறன் கொண்டு செயல்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு ஜிஎஸ்டி; ரூ.995 விற்பனை!

இந்நிலையில் ரஷ்ய ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு 5 % ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் விலை 995.40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஜிஎஸ்டி ரூ.47 என கணக்கிடப்பட்டுள்ளது.கொரோனா பரவல் காரணமாக மாநிலங்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி மீதான 5% ஜிஎஸ்டி வரியைக் குறைக்க மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.