ஸ்புட்னிக் – உலகின் முதல் கொரோனா மருந்துக்கு ஏன் இந்தப் பெயர் தெரியுமா?

 

ஸ்புட்னிக் – உலகின் முதல் கொரோனா மருந்துக்கு ஏன் இந்தப் பெயர் தெரியுமா?

உலகளவில் கொரொனா பாதிப்பு இரண்டு கோடி பேரைக் கடந்திருக்கிறது.கொரோனா நோய்த் தொற்றில் உலகளவில் மூன்றாம் இடத்தில் இந்தியா இருக்கிறது. என்றாலும் மற்ற நாடுகளை விட புதிய நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருவது மிகுந்த கவலை அளிக்கும் செய்தியாகும்.

கொரோனாவில் கோரத்தாண்டவத்தைப் பார்த்து வல்லரசு நாடுகளே மிரண்டு வருகின்றன. கொரோனாவைத் தடுக்க ஒரே வழி, இந்நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது மட்டுமே.

ஸ்புட்னிக் – உலகின் முதல் கொரோனா மருந்துக்கு ஏன் இந்தப் பெயர் தெரியுமா?

இந்தத் துயரம் முடிவடைய ஒரே வழி கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதுதான். பல நாடுகளும் இதற்கான முனைப்போடு செயலில் இறங்கியுள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்த கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் (Gamaleya Reserch Institue) தடுப்பூசியை மனிதர்களிடம் செலுத்தி வெற்றிகரமாக அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. கொரோனா தடுப்பூசியை இன்று பதிவு செய்கிறது ரஷ்யா.

கொரோனா தடுப்பூசிக்கான டெஸ்டுகள் முடிவடைந்ததாக ரஷ்யாவின் சுகாதாரத் துறை அமைச்சர் சில நாட்களுக்கு முன்பே அறிவித்தார். ஆகஸ்ட்டில் பதிவு செய்து அக்டோபரில் நாடு முழுவதும் முகாம் நடத்தப்படும் என்றும் அறிவித்திருதார்.

ஸ்புட்னிக் – உலகின் முதல் கொரோனா மருந்துக்கு ஏன் இந்தப் பெயர் தெரியுமா?

இந்நிலையில் ரஷ்யா நாட்டு அதிபர் விளடிமிர் புதின் அதிகாரப்பூர்வமாகவே கொரோனா தடுப்பூசிப் பற்றி அறிவித்துவிட்டார். மக்களின் நம்பகத்தன்மைக்கு அந்த தடுப்பு மருந்தை தன் மகளின் உடலில் செலுத்தி வைத்துள்ளார்.

உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்துக்கு என்ன பெயர் வைக்கப்படும் என்று உலகமே ஆவலாக எதிர்பார்த்தது. ரஷ்யா அந்த மருந்துக்கு ஸ்புட்னிக் (Sputnik) என்று பெயர் சூட்டியிருக்கிறது.

ஸ்புட்னிக் – உலகின் முதல் கொரோனா மருந்துக்கு ஏன் இந்தப் பெயர் தெரியுமா?

எதனால் இந்தப் பெயர் என்றால், ரஷ்யா முதன்முதலாக விண்ணில் செலுத்திய செயற்கோளின் பெயர் ஸ்புட்னிக். அதனால், அந்தப் பெயரையே உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்துக்கும் வைத்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட நாடுகளோடு இந்தத் தடுப்பு மருந்து விற்பனை செய்வது தொடர்பாகப் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது ரஷ்யா.