பரவும் கொரோனா – இலங்கை கொழும்பு நகரின் முக்கிய சந்தை மூடல்

 

பரவும் கொரோனா – இலங்கை கொழும்பு நகரின் முக்கிய சந்தை மூடல்

கொரோனா நோய்த் தொற்று உலகம் முழுவதும் அச்சமூட்டும் வகையில் பரவி வருகிறது. ஆனால், சில நாடுகள் கொரோனா பரவல் தொடங்கும்போதே முன் எச்சரிக்கையோடு இருந்து மேலும் பரவாமல் தற்காத்துக் கொண்டன. அவற்றில் இலங்கையும் ஒன்று.

இதுவரையில் இலங்கையில் கொரோனா பாதிப்பு 5.038 பேர். இவர்களில் சிகிச்சையில் குணம் அடைந்தவர் 3,328 பேர். இறந்தவர்கள் எண்ணிக்கை 13.

பரவும் கொரோனா – இலங்கை கொழும்பு நகரின் முக்கிய சந்தை மூடல்

நீண்ட நாட்களாக புதிய நோய்ப் பரவலில் கட்டுப்பாடாக இருந்த இலங்கையில் கடந்த இரு வாரங்களாக கொரொனா நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது.

அக்டோபர் 6-ம் தேதியன்று மட்டும் 739 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரையில் இலங்கையில் அதிகளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அன்றுதான். நேற்று 194 பேர் புதிய நோயாளிகளாக அதிகரித்துள்ளனர்.

பரவும் கொரோனா – இலங்கை கொழும்பு நகரின் முக்கிய சந்தை மூடல்

இலங்கையி 21 மாவட்டங்களில் நோய்த் தொற்று இருப்பது தெரிய வந்திருக்கிறது. இலங்கையின் கொழும்பு நகரத்தில் முக்கிய சந்தையான மெனிங் சந்தை கொரோனா பயத்தால் மூடப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் ஒருவரின் சொந்தக்காரருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது தெரிய வந்ததால் இந்த முடிவை எடுத்துள்ளனர். மேலும் சந்தையிலுள்ள சிலருக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளனர்.

இலங்கையில் தொற்று எண்ணிக்கை மற்றும் இறப்பு சதவிகிதம் கட்டுக்குள் இருந்தாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அந்நாட்டு அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. நாடு முழுக்க லாக்டெளன் அறிவிக்கப்படும் வாய்ப்பும் இருப்பதாகத் தெரிகிறது.