“பேசினாலே கொரோனா வைரஸ் பரவும்” – அதிர்ச்சி தரும் மத்திய சுகாதார அமைச்சகம்

 

“பேசினாலே கொரோனா வைரஸ் பரவும்” – அதிர்ச்சி தரும் மத்திய சுகாதார அமைச்சகம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பேசினாலே தொற்று பரவும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக குறைந்து வரும் நிலையில் இந்தியாவில் கடந்த 44 நாட்களுக்கு பிறகு வைரஸ் தொற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,86,364 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,75,55,457 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கொரோனாவால் 3,660 கடந்த 24 மணிநேரத்தில் இறந்த நிலையில், 3,18,895 ஆக உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

“பேசினாலே கொரோனா வைரஸ் பரவும்” – அதிர்ச்சி தரும் மத்திய சுகாதார அமைச்சகம்

இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், கொரோனா தொற்று ஒருவர் தும்மினால் அல்லது இரும்பினால் எச்சிலின் துகள்களின் வழியே காற்றில் பரவி மற்றவர்களை பாதிக்கும். பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மும் போதும் இருமும் போதும், பேசும் போதும் அவரிடமிருந்து வெளிப்படும் பெரிய துகள்கள் இரண்டு மீட்டர் தூரத்திற்குள் கீழே விழுந்துவிடும். அதே சமயம் ஏரோசோல் என்று அழைக்கப்படும் சிறிய எச்சில் துகள்கள் காற்றில் 10 மீட்டர் தூரம் வரை பரவும். ஏரோசோல்கள் அதிக நேரம் உயிருடன் இருக்கும். இது காற்றிலிருந்து கீழே விழுந்ததும், இந்த இடத்தை ஒருவர் தொட்டு விட்டு தனது மூக்கையும், கண்களை தொட்டால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

“பேசினாலே கொரோனா வைரஸ் பரவும்” – அதிர்ச்சி தரும் மத்திய சுகாதார அமைச்சகம்

பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், காற்று வசதி இல்லாத இடங்களில் ஏரோசோல கள் விழுந்தால் அது வேகமாக பரவும். இதனால் முடிந்தவரை முகக்கவசம், தனிமனித இடைவெளி என்பது முக்கியமானது. காற்றோட்டம் உள்ள பகுதிகளில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வரும். இதனால் காற்றோட்டமான வகைகயில் வீடுகளில் உள்ள ஜன்னல்களை திறந்து வையுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.