“ஒருவர் மூலம் 400 பேருக்கு கொரோனா பரவும்” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பகீர் தகவல்!

“ஒருவர் மூலம் 400 பேருக்கு கொரோனா பரவும்” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பகீர் தகவல்!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேலும் 136 ஆக்சிஜன் வசதி உடைய படுக்கைகளை தொடங்கி வைத்துள்ளார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

“ஒருவர் மூலம் 400 பேருக்கு கொரோனா பரவும்” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பகீர் தகவல்!

இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேலும் 136 ஆக்சிஜன் வசதி உடைய படுக்கைகளை தொடங்கி வைத்துள்ளார். இதையடுத்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேலும் 130 ஆக்சிஜன் படுக்கைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த மருத்துவமனையில் மொத்த படுக்கைகளின் எண்ணிக்கை 2050 ஆக உயர்ந்துள்ளது.

“ஒருவர் மூலம் 400 பேருக்கு கொரோனா பரவும்” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பகீர் தகவல்!

மூன்றாவது மற்றும் ஏழாவது தளத்தில் 130 ஆக்சிஜன் வசதியுடைய படுக்கைகளில் தொடங்கப்பட்டுள்ளது. 2050 கொரோனா படுக்கைகளும் நிரம்பி வழியும் அளவிற்கு தனியார் மருத்துவமனைகளில் இருந்து தமிழகத்தை ஒட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த ஒரு வார காலமாக ஏராளமான கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் பொருத்திய வாகனங்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில் , தொற்றாளர்கள் வந்தவுடன், அவர்களை மருத்துவமனைக்குள் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.