ரசிகர்கள் போட்ட பிச்சையே இந்த வாழ்க்கை! கங்கை அமரனுடன் எஸ்பிபி கலகல பேச்சு

 

ரசிகர்கள் போட்ட பிச்சையே இந்த வாழ்க்கை! கங்கை அமரனுடன் எஸ்பிபி கலகல பேச்சு

நம் மனதில் நீங்காத இடம் பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமனியம், அவரது நெடுநாள் நண்பரான கங்கை அமரனிடம் தந்தையர் தினத்தன்று வீடியோ காலில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது

டோக்கியா தமிழ் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி மூலம் எஸ்பி சரண் தந்தையர் தினத்தன்று கங்கை அமரனுக்கு திடீரென வீடியோ போன் செய்து நலம் விசாரித்தார். அப்போது சரண் அருகில் எஸ்பிபி தோன்றி கங்கை அமரனுக்கு திடீர் சர்பரைஸ் கொடுத்தார். எஸ்பிபியை வீடியோ காலில் பார்த்த கங்கை அமரன் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்று சரணுக்கு நன்றி கூறினார். உடனே எஸ்பிபி… இந்த தினம் அந்த தினம் என கொண்டாடுவதில் எல்லாம் தனக்கு நம்பிக்கை இல்லை. ஒவ்வொரு தினமும் நமக்கு அன்னையர் தினமே, ஒவ்வொரு தினமும் நமக்கு தந்தையர் தினம்தான், குருநாதர் தினம்தான் என கூறி, நீலவான ஓடையில்…. நீந்துகின்ற வெண்ணிலா… பாடலை பாடி கங்கை அமரனை மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்று சென்றார் எஸ்பிபி.

ரசிகர்கள் போட்ட பிச்சையே இந்த வாழ்க்கை! கங்கை அமரனுடன் எஸ்பிபி கலகல பேச்சு

சமூக வலைதளங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது எனக்கு விருப்பம் இல்லை என எஸ்பிபி தெரிவித்தார். தொடர்ந்து கங்கை அமரனுடன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட எஸ்பிபி, உனக்கு திருமணம் ஆனத்துக்கே நான் தான் காரணம். உன் காதலுக்கு தூது போனவன் நான், உன் மனைவிக்கு உன்னுடைய லவ் லெட்டரை கொடுத்தது நான்., ஹெல்த் நல்லா இருக்கா? பசங்க நல்லா இருக்காங்களா? என நலம் விசாரித்தார்.

ரசிகர்கள் போட்ட பிச்சையே இந்த வாழ்க்கை! கங்கை அமரனுடன் எஸ்பிபி கலகல பேச்சு

தொடர்ந்து வீடியோ முன் கங்கை அமரனின் மகன்களான வெங்கட் பிரபுவும், பிரேம்ஜியும் தோன்றினர். தொடர்ந்து பிரேமுக்கு திருமணம் செய்ய வலியுறுத்தினார். பாலு அங்கிளை கண்ணில் காட்டியதற்காக வெங்கட் பிரபு சரணுக்கு நன்றி தெரிவித்தார். இடையே இடையே இருவரின் இசையுடன் நகர்ந்தது அந்த உரையாடல்…. கல்யாண கச்சேரிக்கு 250 ரூபாய் மட்டுமே கிடைக்கும் என்றும், அதில் ரூ.15 மட்டுமே தனக்கு கிடைக்கும் என்றும் எஸ்பிபி தெரிவித்தார். நம்ம இசை குடும்பத்தினர் அனைவரும் நல்லா இருக்கனும், நம்ம ரசிகர்கள் குடும்பத்துடன் நல்லா, செழிச்சி, ஆரோக்கியமா இருக்கனும் ! ரசிகர்கள் போட்ட பிச்சையே இந்த வாழ்க்கை அவங்க இல்லையென்றால் இசை கலைஞர்கள் இல்லை என்ற உரையாடலுடன் வீடியோவை முடிக்கிறார் எஸ்.பி.பி