மன்கட் அவுட் – போட்டி ஆரம்பிக்கும் முன்பே சர்ச்சை தொடங்கி விட்டது! #IPL_Updates

 

மன்கட் அவுட் – போட்டி ஆரம்பிக்கும் முன்பே சர்ச்சை தொடங்கி விட்டது! #IPL_Updates

விறுவிறுப்பும்.. அதிரடியும் நிறைந்த ஆட்டங்கள் நிறைந்தது ஐபில் போட்டி. கொரோனா நோய்த் தொற்றால் இந்த ஆண்டு ஒத்தி வைக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் ஐக்கிர அமீரகத்தில் செப்டம்பர்  19- தேதி தொடங்குகிறது. இப்போட்டித் தொடரின் இறுதிப்போட்டி நவம்பரில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் மூன்று வாரங்களுக்கு மேல் இருக்கின்றன. ஆனால், ஐபிஎல் சர்ச்சைகள் இப்போதே தொடங்கிவிட்டன.

மன்கட் அவுட் – போட்டி ஆரம்பிக்கும் முன்பே சர்ச்சை தொடங்கி விட்டது! #IPL_Updates

ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸராக சீன நிறுவனம் இருக்கக்கூடாது எனச் சர்ச்சை கிளம்பியது விவோ தானாக ஒதுங்கிக்கொண்டது. பலத்த போட்டிகள் மத்தியில் ட்ரீம் 11 நிறுவனம் டைட்டில் ஸ்பான்ஸராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

சரி, இந்த சர்ச்சை முடிந்துவிட்டது என்று பார்த்தால் ரிக்கி பாண்டிங் அடுத்த சிக்கலைத் தொடங்கி வைத்திருக்கிறார்.

சென்ற ஆண்டில் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் டீமின் கேப்டனாக இருந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின். அப்போது ராஜஸ்தான் அணிக்கு எதிரான மேட்சில் ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் அவுட் ஆக்கினார் அஸ்வின்.

மன்கட் அவுட் – போட்டி ஆரம்பிக்கும் முன்பே சர்ச்சை தொடங்கி விட்டது! #IPL_Updates மன்கட் அவுட் என்பது, பவுலர் பந்து வீசுவதற்கு முன்பே பேட்ஸ்மேன் (பெளலிங் செய்யப்படும் பக்கத்தில் நிற்கும் பேட்ஸ்மேன்) கிரீஸை விட்டு நகர்ந்துவிட்டால், பவுலர் ஸ்டெம்பில் பந்தால் அடித்துவிடுவார். அதாவது ஒரு பந்து வீசப்படுவதர்கு முன்பே விக்கெட் எடுத்துவிடுவது.

இந்த மன்கட் முறை சரியா.. தவறா என்ற சர்ச்சை சென்ற ஆண்டே பெரும் விவாதத்தைக் கிளப்பியது. ஆயினும் ஐபிஎல் விதியில் இருப்பதாகக் கூறியதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மன்கட் அவுட் – போட்டி ஆரம்பிக்கும் முன்பே சர்ச்சை தொடங்கி விட்டது! #IPL_Updates

சரி, இந்த ஆண்டுக்கான சர்ச்சை விஷயத்திற்கு வருவோம். அஸ்வின் இந்த ஆண்டு டெல்லி டீம்க்காக ஆடவிருக்கிறார். அந்த அணியின் பயிற்சியாளர் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ’அஸ்வின் திறமையான ஒரு பவுலர். நாங்கள் மன்கட் முறையில் நாம் அவுட் ஆக்கப்போவதில்லை என்று அவரிடம் மன்கட் முறையில் விக்கெட் எடுக்கக்கூடாது என்று பேச உள்ளேன். விதிகளின் படி அது சரியாக இருக்கலாம். ஆனால், விளையாட்டின் தார்மீக அடிப்படையில் அது சரியல்ல’ என்று கூறியிருந்தார்.

உடனே அஸ்வின் ரசிகர்கள் பாண்டிங்குக்கு எதிராக சோஷியல் மீடியாவில் கருத்துகளைத் தெரிவித்தனர். ஐபிஎல் விதியின்படிதானே அஸ்வின் செய்தார். இதில் அஸ்வினைக் குற்றவாளியாக்குவது போல பேசுவது சரியல்ல என்று கடுமையாக பதிவிட்டனர்.

மன்கட் அவுட் – போட்டி ஆரம்பிக்கும் முன்பே சர்ச்சை தொடங்கி விட்டது! #IPL_Updates

இந்நிலையில், பிராட் ஹாக் ஒரு கேள்வியை பாண்டிங்க்கு வைத்துள்ளார். ‘கிரீஸைத் தாண்டிச் செல்லும் வீரரை மன்கட் முறைவில் அவுட்டாக்குவது ஸ்போர்ட்ஸ் ஸ்பிரிட் இல்லையென்றால், கிரிஸைத் தாண்டி பேட்ஸ்மேன் செல்வது மட்டும் ஸ்போர்ட்ஸ் ஸ்பிரிட்டா?’ என்பதே அக்கேள்வி.

ரன் எடுக்க விரைந்து ஓடும்போது பேட்ஸ்மேன் கீழே விழுந்துவிட்டார் அல்லது அடிப்பட்டு விட்டது என்றால், பவுலர் அவரை அவுட் ஆக்காமல் செய்வது வேண்டுமானால் ஸ்போர்ட்ஸ் ஸ்பிரிட்டில் சேரும். ஒரு பேட்ஸ்மேன் விதியை மீறும்போது அவுட் ஆக்குவதில் என்ன தவறு இருக்கிறது என்கிறார்கள் அஸ்வின் ரசிகர்கள். மேலும் மன்கட் முறையில் அவுட்டாக்கக் கூடாது என்றால், அந்த விதியையே எடுத்துவிடலாமே என்றும் கேட்கிறார்கள். நியாயம்தானே!

மன்கட் அவுட் – போட்டி ஆரம்பிக்கும் முன்பே சர்ச்சை தொடங்கி விட்டது! #IPL_Updates

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மன்கட் சர்ச்சை பற்றிய கேள்விக்கு ஐபிஎல் 2020 லும் மன்கட் முறையில் விக்கெட் எடுப்பேன் என்று அஸ்வின் கூறியிருந்தார். ரிக்கி பாண்டிங் சொல்வதை அஸ்வின் கேட்கப்போகிறாரா… இல்லை தனது வழக்கமான ஆட்டமுறையைப் பின்பற்ற போகிறாரா என்பது போகப்போகவே தெரியும்.