"நங்கூரமிட்ட ஜெகதீசன்; சரவெடியாய் வெடித்த ஷாருக்கான்" - "ஹாட்ரிக்" கோப்பை வென்ற தமிழ்நாடு!

 
ஷாருக்கான்

உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் மிகவும் பிரபலமான தொடர் சையத் முஷ்டாக் அலி தொடர். இந்தத் தொடர் டி20 பார்மெட்டில் நடைபெறும். ஒவ்வொரு மாநிலத்தையும் பிரதிநிதித்துவப்படும் விதமாக 38 அணிகள் பங்கேற்கும். அந்த வகையில் இந்தாண்டு நடைபெற்ற தொடரில் தமிழ்நாடு அணியும் கர்நாடகா அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இரு அணிகளும் சமபலம் கொண்ட அணிகள். குறிப்பாக இரண்டு அணிகளும் தலா இரண்டு முறை சையத் முஷ்டாக் அலி கோப்பையைக் கைப்பற்றியுள்ளன.

Syed Mushtaq Ali Trophy: syed mushtaq ali trophy Shahrukh khan baba  aparajith shine: शाहरूख खान और बाबा अपराजित के दम पर तमिलनाडु सेमीफाइनल में  - Navbharat Times

இருப்பினும் தமிழ்நாடு அணியை விட கர்நாடகா அணி பலம் வாய்ந்தது. ஏனெனில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய கடைசி 5 போட்டிகளில் நான்கில் கர்நாடகாவே வெற்றிகண்டுள்ளது. அதேபோல கர்நாடக அணி பைனலுக்குள் நுழைந்தால் கோப்பையை வெல்லாமல் சென்றதே இல்லை. 2019ஆம் ஆண்டு கர்நாடகாவிடம் கோப்பையைக் கொடுத்ததே தமிழ்நாடு தான். பல டேட்டாக்கள் தமிழ்நாடு அணிக்கு எதிராகவே இருந்தது.

Image

இருப்பினும் நம்பிக்கையோடு விஜய் சங்கர் தலைமையில் தமிழ்நாடு அணி களமிறங்கியது. மணீஷ் பாண்டே தலைமையில் கர்நாடகா அணி மோதியது. அதன்படி டாஸ் வென்ற தமிழ்நாடு பந்துவீச்சை தேர்வுசெய்தது. ஆரம்பம் முதலே தமிழ்நாடு பந்துவீச்சாளர்கள் கர்நாடக பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்தனர். பார்ட்னர்ஷிப் நிலைக்காமல் இருக்க சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை சாய்த்தனர். குறிப்பாக சாய் கிஷோரின் சுழல் ஜாலத்தில் தொடக்க ஜோடிகளான ரோஹன்-கேப்டன் மணீஷ் பாண்டே ஜோடி வெளியேறியது.


இருப்பினும் சரத் மற்றும் அபினவ் மனோகர் ஆகிய இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன்களைச் சேர்த்தனர். இதனால் மதிப்புமிக்க ஸ்கோர் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சாய் கிஷோர் சரத்தை பெவிலியனுக்கு அனுப்பி திருப்புமுனையை ஏற்படுத்தினார். சிறப்பாக விளையாடிய மனோகர் 46 ரன்களில் வெளியேற பிரவீன் துபே ஓரளவு அதிரடி காட்டி அணியின் ஸ்கோரை 151 ரன்களில் கொண்டுவந்து நிறுத்தினார். இதையடுத்து ஆடவந்த தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர் ஹரி நிஷாந்த் ஆரம்பத்திலேயே வெளியேறினார்.


இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் ஜெகதீசன் பொறுப்புடன் விளையாடினார். அவருடன் கேப்டன் விஜய் சங்கரும் இணைய தமிழ்நாடு அணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமானது. ஆனால் திடீரென்று இந்த ஜோடியை பந்துவீச்சாளர் கரியப்பா வீழ்த்த ஆட்டம் சூடுபிடித்தது. எனினும் அதிரடி ஆட்டக்காரர் ஷாருக்கான் சிக்ஸர்களை பறக்கவிட்டு தமிழ்நாடு அணிக்கு மூன்றாவது கோப்பையை வாங்கி கொடுத்துவிட்டார். அவர் 15 பந்துகளில் 33 ரன்கள் எடுத்திருந்தார். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்தில் பவுண்டரி, கடைசி பந்தில் சிக்ஸர் விளாசினார் ஷாருக்கான். கடந்த முறையும் தமிழ்நாடு அணி தான் கோப்பையை வென்றிருந்தது.