ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20- இந்திய அணி வெற்றி
இந்திய அணி ஆஸ்திரேலியாலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது முதல் போட்டியானது கை மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

இன்று மூன்றாவது போட்டி ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சங், ஹர்சித் ரானா ஆகியோர் நீக்கப்பட்டு அர்ஸ்தீப் சிங் மற்றும் ஜித்தேஷ் சர்மா சேர்க்கப்பட்டனர். முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் இங்கிலீஷ் ஆகியோர் அர்ஸ்தீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். கேப்டன் மிச்சல் மார்ஸ் மற்றும் ஓவன் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்க செய்தார் வருண் சக்கரவர்த்தி. இதன் பிறகு டிம் டேவிட் மற்றும் மார்க்கஸ் ஸ்டானிஸ் இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். டிம் டேவிட் 74 ரன்களிலும் , மார்க்கஸ் ஸ்டானிஸ் 64 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதிக்கட்டத்தில் மேத்யூ ஷார்ட் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது.
187 என்ற இலக்கை துரத்திய இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா 25 ரன்கள் சேர்த்து அதிரடி துவக்கம் தந்தார். மற்றொரு துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து மீண்டும் ஏமாற்றம் அளித்தார். கேப்டன் சூர்யா குமார் யாதவ் தன் பங்குக்கு 24 ரன்கள் சேர்த்தார்.ஒரு கட்டத்தில் இந்திய அணி ரன் குவிக்க தடுமாறிய போது இறங்கிய வாசிங்டன் சுந்தர் 4 சிக்ஸர்கள் விளிசி ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பினார்.18.3 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் 23 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் இந்த தொடரானது 1 - 1 என சமனில் உள்ளது.


