நியூசிலாந்து உடனான டெஸ்ட்- வலுவான நிலையில் இந்திய அணி

 
INDvNZ

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.நடந்து முடிந்த டி20 தொடரில் இந்திய அணி 3 போட்டிகளிலும் வென்று அசத்தியது.

indvsnz

இந்நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று கான்பூரில் தொடங்கியது.இந்திய அணியில் முன்னணி வீர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா,ரிசப் பந்த்,பும்ரா ஆகியோர் ஓய்வு எடுத்து உள்ளதால் இந்திய அணி இரண்டாம் கட்ட வீரர்கள் உடனே களமிறங்கியது. இந்திய அணிக்கு கோலி இல்லாததால் ரகானே கேப்டனாக செயல்பட்டார்.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரகானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர்.மயங்க் அகர்வால் 13 ரன்களில் ஜமிசன் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த புஜாராவும் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த சுப்மன் கில் 52 ரன்களில் ஜமிசன் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார்.
இதன்பின் கேப்டன் ரகானே மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரகானே 35 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.இதன் பின்னர் ஜடேஜா மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி இந்திய அணியை மீட்டது.அபாரமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.ஸ்ரேயாஸ் அய்யர் 75 ரன்களுடனும் ஜடேஜா 50 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜமிசன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.