மறுபடியும் முதல்ல இருந்தா… நடராஜனுக்கு கொரோனா – ஐபிஎல் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்!

 

மறுபடியும் முதல்ல இருந்தா… நடராஜனுக்கு கொரோனா – ஐபிஎல் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்!

இந்தாண்டு மார்ச் மாதம் வரை அமைதியாக இருந்த கொரோனா, ஐபிஎல் தொடங்கிய ஏப்ரல் மாதத்திலிருந்து இரண்டாம் அலையாக வேகமெடுத்தது. இதனால் வீரர்கள் அனைவருக்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அனைவருக்கும் தொடர்ந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வெற்றிகரமாக பாதி போட்டிகள் நடந்துமுடிந்திருந்த நிலையில் கொரோனா தனது வேலையைக் காட்டியது. அதீத கட்டுப்பாடுகளையும் மீறி பயோ பபுளுக்குள்ளும் கொரோனா நுழைந்தது.

மறுபடியும் முதல்ல இருந்தா… நடராஜனுக்கு கொரோனா – ஐபிஎல் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்!

வருண் சக்கரவர்த்திக்கு தான் முதன் முதலில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நிலைமை கைமீறி சென்றதை உணர்ந்த பிசிசிஐ ஐபிஎல் போட்டிகளைத் தற்காலிகமாக நிறுத்திவைத்தது. எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர்-அக்டோபர் மாதத்தில் நடைபெறும் எனவும், செப்டம்பர் 19ஆம் தேதி முதல் போட்டி தொடங்கும் எனவும் சமீபத்தில் பிசிசிஐ அறிவித்தது. திட்டமிட்டபடி முன்பை விட பல கட்டுப்பாடுகளுடன் ஐபிஎல் போட்டிகள் தொடங்கின. மொத்தம் மூன்று போட்டிகள் வெற்றிக்கரமாக நடந்துமுடிந்துள்ளது. இச்சூழலில் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்திருக்கிறது கொரோனா.

மறுபடியும் முதல்ல இருந்தா… நடராஜனுக்கு கொரோனா – ஐபிஎல் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்!

ஆம் இன்று டெல்லி-ஐதராபாத் அணிகளுக்கிடையே போட்டி நடைபெறவிருந்தது. வழக்கம் போல வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக தமிழக வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நடராஜனோடு தொடர்பில் இருந்த மற்றொரு வீரர் விஜய் சங்கர், நெட் பவுலர் பெரியசாமி உள்ளிட்ட ஐந்து அணி உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.