புதிய அவதாரம் எடுத்துள்ள ஆர்சிபி அணி! களைகட்டப்போகும் ஆட்டம்

 

புதிய அவதாரம் எடுத்துள்ள ஆர்சிபி அணி! களைகட்டப்போகும் ஆட்டம்

நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள ஆட்டங்கள் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.

புதிய அவதாரம் எடுத்துள்ள ஆர்சிபி அணி! களைகட்டப்போகும் ஆட்டம்

இதற்கான முன்னேற்பாடுகளில் அணிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் சூழலில் அணி வீரர்களின் விவரங்களை ஆகஸ்ட் 20-ம் தேதிக்குள் ஐபிஎல் நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டிருந்தது. ஐபிஎல் தொடரை தொடர்ந்து ஐசிசி நடத்தும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணையும் சமீபத்தில் வெளியானது.

அதன்படி ஐபிஎல் முடிந்த அடுத்த இரண்டே நாட்களில் அதாவது அக்டோபர் 17 தேதி டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. எனவே வெளிநாட்டு வீரர்கள் அதற்கு தயாராவதற்காக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர்.இதன் காரணமாக மாற்று வீரர்களுக்காக அணிகள் பல்வேறு வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இதுவரை நடந்த ஆட்டங்களில் அடிப்படையில் புள்ளி பட்டியலில் ஆர்சிபி அணி 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரை நன்றாக தொடங்கிய ஆர்சிபி அணிக்கு வீரர்களின் விலகல் பெரும் சிக்கலை கொடுத்தது இந்நிலையில் நடப்பு ஐபில் தொடரில் இருந்து வெளியேறும் வீரர்கள் மற்றும் அதற்கு மாற்று வீரர்களை ஆர்சிபி இன்று அறிவித்தது.இதில் ஆடம் சாம்பாவுக்கு பதிலாக இலங்கை அணி வீரர் வனிடு ஹசரங்கா சேர்க்கப்பட்டுள்ளார்.

புதிய அவதாரம் எடுத்துள்ள ஆர்சிபி அணி! களைகட்டப்போகும் ஆட்டம்

இதே போல் வேகப்பந்து வீச்சாளர் டேனியல் சாம்ஸ்க்கு மாற்றாக இலங்கையின் துஷ்மந்தா சமீரா சேர்க்கப்பட்டுள்ளார். இது ஒரு புறம் இருக்க புதிதாக சிங்கப்பூர் அணியை சேர்ந்த டிம் டேவிட் எனும் இளம் வீரரையும் ஆர்சிபி அணி ஒப்பந்தம் செய்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.சிங்கப்பூர் தேசிய அணியில் சேர்ந்த ஒருவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில் சிங்கப்பூர் அணியில் இருந்து விலகி ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த டிம் டேவிட், அங்கு உள்நாட்டு தொடரான பிக் பேஸில் அதிரடி காட்டி கவனம் பெற்றார். மேலும் ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளர் சைமன் கேடிச் தொடரில் இருந்து விலகி உள்ளதால்,மீதமுள்ள போட்டிக்கு மைக் ஹெசன் பயிற்சியாளராகவும் செயல்படுவார் என அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.