தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்- 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய பும்ரா!

 
INDvsSA

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான  கடைசி டெஸ்ட் போட்டி நேற்று கேப்டவுனில் உள்ள மைதானத்தில் தொடங்கியது.

INDvsSA

முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தால்  223 ரன்கள் சேர்த்தது. தென்ஆப்பிரிக்கா அணி தரப்பில் ககிசோ ரபாடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 1 விக்கெட் இழப்பிற்கு 18 ரன்கள் சேர்த்தது. இன்று பேட்டிங்கை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் கீகன் பீட்டர்சன் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். அவருக்கு ஒத்துழைக்கும் விதமாக ஆடிய மகாராஜ் , வாண்டர் டுசன்,பவுமா ஆகியோர் சிறிய பங்களிப்பை அளித்தனர். பீட்டர்சன் 72 ரன்களில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா அணி 210 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இந்தியன் அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய பும்ரா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்க அணியை விட 13 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Indvssa

பின்னர் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக ராகுல் மற்றும் அகர்வால் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் வந்த புஜாரா மற்றும் விராட் கோலி ஜோடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் சேர்த்துள்ளது. இதன் மூலம் இந்திய அணி தற்போது வரை 70 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.நாளை இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தை பொறுத்தே இந்திய அணியின் வெற்றி தோல்வி முடிவாகும் என்பதால் ரசிகர்கள் போட்டியின் முடிவிற்காக ஆவலுடன் எதிர்நோக்கி காத்துள்ளனர்.