மீண்டும் டாஸ் தோற்றார் கோலி… ஆரம்பித்துவிட்டது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்!

மீண்டும் டாஸ் தோற்றார் கோலி… ஆரம்பித்துவிட்டது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்!

கிரிக்கெட் ரசிகர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் மழை குறுக்கிட்டது. இதனால் முதல் நாள் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. மழை விடாமல் பெய்து கொண்டிருந்ததால் நேற்றைய நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் இன்று மழை இல்லாவிட்டால் போட்டி நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. அதன்படி இன்று மழை ஓய்ந்துவிட்டதால் போட்டி தொடங்கியிருக்கிறது.

மீண்டும் டாஸ் தோற்றார் கோலி… ஆரம்பித்துவிட்டது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்!

டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்திருக்கிறார். இந்திய அணி சார்பில் விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்ய ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், புஜாரா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்ப்ரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகியோர் களமிறங்குகின்றனர்.

மீண்டும் டாஸ் தோற்றார் கோலி… ஆரம்பித்துவிட்டது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்!

ஜெமிசன், நீல் வாக்னர், டிம் சவுத்தி, டிரெண்ட் போல்ட் என நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியிருக்கிறது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாகக் களமிறங்கியுள்ள ரோஹித் சர்மா, சுப்மன் கில் நிதானமாக ஆடிவருகின்றனர். இப்போது வரை 9 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது.