பரபரப்பாக நடைபெற்ற ஆட்டம்...! இந்திய அணி த்ரில் வெற்றி!
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.
தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி கடந்த 08ம் தேதி நடைபெற்ற நிலையில், இதில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2வது டி20 போட்டி நேற்று தென் ஆப்ரிக்காவின் கெப்ரா பகுதியில் உள்ள எஸ்.டி. ஜார்ஜ் பார்க் மைதானத்தில் கடந்த 10ம் தேதி நடைபெற்ற நிலையில், இப்போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், இந்திய அணி பேட்டிங் ஆடியது. கேப்டன் சஞ்சு சாம்சன் இந்த போட்டியிலும் டக் அவுட் ஆன நிலையில், அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அபிஷேக் சர்மா அரை சதமும், திலக் வர்மா சதமும் விளாசினர். இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2க்கு1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.